Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருஷ்யம் 2ல் கூட இல்லாத டிவிஸ்ட்.. ஜாம்பவானை ஓரம்கட்டும் தோனி.. இதுக்குதான் இவரை ஏலம் எடுத்தீங்களா?

சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் மொயின் அலி எடுக்கப்பட்ட காரணத்தால் முக்கியமான வீரர் ஒருவர் ஓரம்கட்டப்படுவார் என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது.

இந்த முறையும் சிஎஸ்கே அணியின் ஏலம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

யார்?

யார்?

2021 ஐபிஎல் ஏலத்தில் மொயின் அலி எடுக்கப்பட்ட காரணத்தால் முக்கியமான வீரர் ஒருவர் ஓரம்கட்டப்படுவார் என்று கூறுகிறார்கள். தற்போது சிஎஸ்கேவில் ஆடுவதற்கு ரெடியாக இருக்கும் வெளிநாட்டு வீரர் 6 பேர். இம்ரான் தாஹிர், டு பிளசிஸ், சாம் கரன், பிராவோ, மொயின் அலி, லுங்கி நிகிடி ஆகிய வீரர்கள்.

எப்படி

எப்படி

இதில் டு பிளசிஸ், சாம் கரன், மொயின் அலி கண்டிப்பாக அணியில் ஆடுவார்கள். அணியில் ஏற்கனவே சாம் கரன், ஜடேஜா, அலி ஆகிய மூன்று ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி ஆல்ரவுண்டர் பவுலர் இல்லாமல் முழு ஸ்பீட் பவுலரை அணியில் எடுப்பார் என்று கூறப்படுகிறது .

பிராவோ

பிராவோ

அதாவது பிராவோவை அணியில் எடுக்காமல் முழு ஸ்பீட் பவுலர் லுங்கி நிகிடி அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது . டெத் ஓவர்களில் இரண்டு பேருமே நன்றாக பவுலிங் செய்வார்கள். ஆனால் பிராவோ இப்போது பார்மில் இல்லை. வயதும் ஆகிவிட்டது.

 எடுப்பார்

எடுப்பார்

இதனால் லுங்கிக்கு முன்னரிமை கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த சீசனில் பெரும்பாலும் பிராவோ ஆட மாட்டார் என்று கூறுகிறார்கள். சில போட்டிகளில் மட்டுமே இவர் அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Story first published: Saturday, February 20, 2021, 9:57 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+