தமிழக வீரர்களுடன் சண்டை போட்டவர்.. கண்டாலே ஆகாது.. சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரரால் சர்ச்சை..ஷாக் பின்னணி
சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த வீரரால் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இணையத்தில் இதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் நேற்று பிற்பகல் தொடங்கிய ஏலம் இரவு வரை நீண்டது.
ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து ஏலத்தில் காய் நகர்த்தியது. சிஎஸ்கே அணி சில குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே குறி வைத்தது. இந்த நிலையில் இன்று 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

எப்படி
இந்த நிலையில் சிஎஸ்கேவில் கிருஷ்ணப்பா கவுதம் நேற்று ஏலம் எடுக்கப்பட்டார். இவரை 9.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலம் எடுத்தது. ஆப் ஸ்பின் பவுலரான இவர் நன்றாக பேட்டிங்கும் செய்வார் என்பதால் கிருஷ்ணப்பா கவுதமை சென்னை அணி இவ்வளவு தொகைக்கு எடுத்தது.

சர்ச்சை
இவரை அணியில் எடுத்தது மூன்று காரணங்களுக்காக சர்ச்சையாகி உள்ளது. அதன்படி இவர் பெரிய அளவில் பார்மில் இல்லை. பவுலிங் செய்தாலும் அதிரடி பேட்ஸ்மேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. இவருக்கு போய் ஏன் 9.25 கோடி ரூபாய் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சை 2
அதேபோல் கிருஷ்ணப்பா கவுதம் சமீபத்தில் நடந்த முதல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. சையது முஷ்டாக் கோப்பை தொடங்கி எதிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. பல வீரர்கள் நன்றாக ஆடிய நிலையில் இவரை ஏன் எடுத்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சை 3
இது போக முதல் தர போட்டிகளில் இவர் தமிழக வீரர்களுடன் அடிக்கடி சண்டை போட கூடியவர். தமிழ்நாட்டுடன் போட்டி என்றாலே உடனே சண்டை போடுவதுதான் இவரின் வேலை. அப்படி தமிழக வீரர்களை மோசமாக நடத்தும் இவரை அணியில் எடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

காரணம்
இவர் நன்றாக ஸ்பின் செய்ய கூடியவர். ஆப் ஸ்பின் ஆப்ஷனுக்காக இவரை எடுத்துள்ளனர். மொயின் அலி, ஜடேஜா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய மூன்று ஸ்பின் பவுலர்கள் சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்புள்ளது . இது போக பிராவோ, சாகர் ஆகிய இரண்டு ஸ்பீட் பவுலர்கள், சாம் கரன் போன்ற ஆல் ரவுண்டர் ஆடுவார்கள். இதனால் நிறைய பவுலிங் ஆப்ஷன் இருக்கும்.

பவுலிங்
கிருஷ்ணப்பா கவுதம் தமிழர்களுடன் சண்டை போட்டவர் என்றாலும் நேற்று தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். எல்லாரும் வாங்க, விசில் போடுங்க என்று இவர் தமிழில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவர் எந்த மாநிலமாக இருந்தாலும் நன்றாக ஆடினால் இவரை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

முதல் வீரர்
தமிழக அணியில் இதுவரை கர்நாடக வீரர்கள் ஆடியது இல்லை. பெங்களூர் அணியில் வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஸ்வின் போன்ற தமிழக வீரர்கள் ஆடி உள்ளனர். இந்த நிலையில் சென்னை அணிக்கு வந்திருக்கும் கிருஷ்ணப்பா கவுதம் தனது திறமையை நிரூபிப்பாரா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications