என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. இது கூட தெரியாதா? எகிறிய பிபி.. ஏலத்தின் போது சிஎஸ்கே செய்த பெரிய தவறு!
சென்னை: நேற்று ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி எடுத்த சில முடிவுகள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
நேற்று சென்னையில் 2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்தது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னை வந்து இருந்தனர்.
சென்னையில் 5 மணி நேரம் நடந்த இந்த விறுவிறுப்பான ஏலத்தில் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி இதில் சில நல்ல முடிவுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்துள்ளது.

நல்ல முடிவு
சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய் கொடுத்து மொயின் அலியை எடுத்தது. சிஎஸ்கே அணியின் இந்த தேர்வு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதேபோல் தமிழக அணியின் ஓப்பனர் ஹரி நிஷாந்த் சிஎஸ்கே அணியால் அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டதும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

மோசம்
ஆனால் கர்நாடக வீரர் கே கவுதமை சிஎஸ்கே அணி தேவையின்றி அதிக தொகைக்கு எடுத்தது. இவர் திறமையான வீரர்தான். ஆனாலும் இவருக்கு 9.25 கோடி ரூபாய் எல்லாம் கொடுத்தது மிகவும் தவறான விஷயம். இவரை எடுத்த காரணத்தால் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

சிக்கல்
அதாவது சிஎஸ்கே அணியிடம் 19 கோடி ரூபாய்தான் இருந்தது. இதில் அந்த அணி 16 கோடியை இரண்டு வீரர்களுக்கு செலவு செய்துவிட்டது. அதிலும் கவுதமிற்கு 9.25 கோடி ரூபாயை செலவு செய்துவிட்டனர். இதனால் மீதம் இருந்த மூன்று கோடியில் முக்கிய வீரர்களை எடுக்க முடியவில்லை.

முடியவில்லை
சிஎஸ்கேவின் இந்த முடிவால் பல நல்ல வீரர்களை கடைசி கட்டத்தில் எடுக்க முடியவில்லை. சிஎஸ்கே அணியில் நல்ல ஓப்பனிங் வீரரே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்று வீரராக புஜாராவை எடுத்து இருந்தாலும், நல்ல பேட்டிங் செய்ய கூடிய வெளிநாட்டு ஓப்பனிங் வீரர் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

எவ்வளவு
சிஎஸ்கே அணி 19 கோடி ரூபாய்தான் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு கவுதமை எடுத்தது போல தெரிகிறது. ஒன்று அல்லது இரண்டு வீரரை குறி வைத்து மட்டுமே சிஎஸ்கே இந்த மினி ஏலத்திற்கு வந்து இருக்கிறது. அதனால் மேக்ஸ்வெல்லை எடுக்க நேற்று 14 கோடி வரை சிஎஸ்கே சென்றது.

பணம்
இவரை ஏலம் எடுக்கும் போது எங்கே சிஎஸ்கே மொத்த தொகையையும் இவருக்கே கொடுத்துவிடுமோ என்று பிபி எகிறியது. கையில் எவ்வளவு இருக்கிறது என்று தெரியாமல் சிஎஸ்கே ஏலம் எடுக்க வந்தது. சிஎஸ்கே கொஞ்சம் கவனமாக செயல்பட்டு இருந்தால் தமிழக வீரர் ஷாருக்கானை எடுத்து இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே அணி தமிழக வீரர்களை ஏலம் எடுக்க கை கூட தூக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications