Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியா இப்படி பண்ணுனது.. நம்ப மறுக்கும் சிஎஸ்கே.. ஏலத்தில் நடந்த சம்பவத்தால் செம கடுப்பில் தோனி!

சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் கோலி செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே அணி எடுக்க தீவிரமாக முயன்றது. கடைசியில் இவர் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஏலம்

ஏலம்

நடந்து முடிந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி மேக்ஸ்வெல்லை எடுக்க முயன்றது. சிஎஸ்கே அணியில் பெரிதாக ஆல் ரவுண்டர் இல்லை.இதனால் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே குறி வைத்தது. பினிஷிங் செய்யவும், நன்றாக ஆல் ரவுண்டர் பவுலிங் செய்யவும் சிஎஸ்கே அணியிடம் ஆட்கள் இல்லை.

முடியவில்லை

முடியவில்லை

எப்படியாவது இவரை அணியில் எடுக்கலாம் என்று நினைத்தது. ஆனால் பெங்களூர் அணி இவரை விடுவதாக இல்லை. எவ்வளவு ஆனாலும் மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டும் என்று பெங்களூர் அணி இருந்தது. பல கோடிகளை கொடுத்து இவரை ஏலம் எடுக்க பெங்களூர் தயாராக இருந்தது.

 எப்படி

எப்படி

இதனால் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணி இதனால் வெளிநாட்டு வீரர் ஸ்லாட்டை மொயின் அலியை வைத்து நிறைவு செய்தது.திரிஷா கிடைக்கலைனா திவ்யா என்ற ரீதியில் மொயின் அலியை சென்னை அணி எடுத்தது.

சர்ச்சை

சர்ச்சை

மேக்ஸ்வெல்லை விட்டுக்கொடுக்க கூடாது என்ற மனநிலையில் கோலி இருந்ததாக கூறப்படுகிறது. மேக்ஸ்வெல்லை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று சிஎஸ்கேவும் இருந்தது. இதனால்தான் 19 கோடி ரூபாய் கையில் இருந்தும் கூட 14 கோடி வரை மேக்ஸ்வெல்லுக்கு கொடுக்க சிஎஸ்கே நினைத்தது.

முடியவில்லை

முடியவில்லை

ஆனால் பெங்களூர் அணி கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி மீது தோனி கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேக்ஸ்வெல்லை வைத்து சிஎஸ்கே நிறைய திட்டங்களை வகுத்து இருந்தது. ஜடேஜா, சாம் கரன் போல இவரை பயன்படுத்த சிஎஸ்கே நினைத்தது.

நினைக்கவில்லை

நினைக்கவில்லை

ஆனால் பெங்களூர் அணி இப்படி செய்யும் என்று சிஎஸ்கே நினைக்கவில்லை. அதிலும் இவரை 14 கோடி ரூபாய் தாண்டியும் பெங்களூர் அணி எடுக்க முயன்றதை சிஎஸ்கே தோனி, யாரும் நம்பவில்லை என்கிறார்கள். கோலி மேக்ஸ்வெல்லை விரும்ப மாட்டார் என்று நம்பி சிஎஸ்கே ஏமாந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, February 20, 2021, 9:35 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+