Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 சம்பவம்.. சிஎஸ்கேவிற்கு கை கொடுத்த பிளான்.. தோனிக்கும் செம குட்நியூஸ் இது!

சென்னை: நேற்று ஒரே நாளில் நடந்த நான்கு சம்பவங்கள் சிஎஸ்கே அணிக்கு பெரிய நல்ல செய்தியை கொடுத்து இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் மகிழ்ச்சியில் இருக்கிறது.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி புதிய வீரர்கள் 6 பேரை எடுத்து புதிய பொலிவு பெற்றுள்ளது. ஆப் ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது .

சென்னை

சென்னை

நேற்று ஒரே நாளில் நடந்த நான்கு சம்பவங்கள் சிஎஸ்கே அணிக்கு பெரிய நல்ல செய்தியை கொடுத்து இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் மகிழ்ச்சியில் இருக்கிறது. தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடந்து வருகிறது.

நேற்று போட்டி

நேற்று போட்டி

இதில் நேற்று நடந்த விஜய் ஹசாரே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக ஆடிய ஜெகதீசன் 103 பந்தில் 101 ரன்கள் எடுத்தார். அதேபோல் இன்னொரு பக்கம் கேரளா அணியில் ஆடிய ராபின் உத்தப்பா 107 ரன்கள் எடுத்தார். இரண்டு சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் நேற்று தங்கள் அணிக்காக மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சாய் கிஷோர் நேற்று 10 ஓவர் போட்டு 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இதில் 1 ஓவர் மெய்டன் ஓவராக வீசினார். இப்படி நேற்று சென்னை வீரர்கள் மூன்று பேருமே சிறப்பாக பவுலிங் செய்தனர்.

மூன்று விக்கெட்

மூன்று விக்கெட்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்து இருக்கும் ஹரிசங்கர் ரெட்டி நேற்று 2 விக்கெட் எடுத்தார். ஆந்திர அணியில் ஆடி வரும் இவர் நேற்று கடைசி கட்டத்தில் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்து போட்டியை பினிஷ் செயதார். இது சிஎஸ்கே எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் எல்லோரும் தற்போது பார்மில் உள்ளனர். அதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்மிற்கு திரும்பி உள்ளனர். ராபின் உத்தப்பாவும் நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி கடந்த சீசன் போல இந்த சீசனில் சொதப்ப வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

Story first published: Sunday, February 21, 2021, 9:23 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+