Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டா வரச்சொல்லுங்க.. ஆனா பாவம் பாஸ் இந்த சிஎஸ்கே.. பரிதாபமான நிலை.. வைரலாகும் பரபரப்பு வீடியோ

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி தயாராகி வரும் நிலையில் அணிக்குள் இன்னும் நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி புதிய வீரர்கள் 6 பேரை எடுத்து புதிய பொலிவு பெற்றுள்ளது. ஆப் ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது .

அணி தேர்வு

அணி தேர்வு

2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி தயாராகி வரும் நிலையில் அணிக்குள் இன்னும் நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது. சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர்கள் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. ராபின் உத்தப்பா, டு பிளசிஸ், ரூத்துராஜ் ஆகியோரில் யார் ஓப்பனிங் இறங்குவார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

எப்படி இருக்கிறது

எப்படி இருக்கிறது

அதேபோல் 9.25 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட கவுதம் அணியில் ஆடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஜடேஜா, சாம் கரண், மொயின் அலி போன்ற வீரர்கள் அணியில் இருப்பதால் யாருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

சிக்கல்

சிக்கல்

கூடுதலாக வெளிநாட்டு வீரர்கள் டு பிளசிஸ், சாம் கரன், பிராவோ, மொயின் அலி, இம்ரான் தாஹிர் ஆகியோரில் எந்த 4 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில் சிஎஸ்கேவில் நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது. இதை சிஎஸ்கே எப்படி சரி செய்யும் என்று தெரியவில்லை.

ரெய்னா

ரெய்னா

இன்னொரு பக்கம் ரெய்னா அணிக்குள் திரும்ப வந்த இருக்கிறார். இவர் கடந்த வருடம் ஆடவில்லை . இதனால் இவர் பார்மில் இருப்பாரா என்று தெரியவில்லை. இவருக்கும் தோனிக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை . சிஎஸ்கே கொஞ்சம் பரிதாபமான நிலையிலேயே தற்போது இருக்கிறது.

வீடியோ

இந்த நிலையில் சிஎஸ்கேவின் நிலையை குறிக்கும் வகையில் கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை வைத்து சிஎஸ்கே அணிக்காக வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது . முக்கியமாக ரெய்னாவை கண்டா வரச்சொல்லுங்க என்று சொல்லும் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது.

வைரல்

வைரல்

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பழைய சிஎஸ்கே திரும்ப வர வேண்டும். அதேபோல் அணியில் இருக்கும் எல்லா வீரர்களும் பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று இந்த வீடியோவைஷேர் செய்து ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Saturday, February 20, 2021, 11:07 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+