Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணுறது.. அதிருப்தியில் 4 பேர்.. தோனிக்கு ஏற்பட்ட காம்பினேஷன் குழப்பம்!

சென்னை: சிஎஸ்கே அணியில் தற்போது பெரிய அளவில் காம்பினேஷன் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்கிறார்கள்.

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி புதிய வீரர்கள் 6 பேரை எடுத்து புதிய பொலிவு பெற்றுள்ளது. ஆப் ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது .

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி

எப்படி

தற்போது சிஎஸ்கே அணியில் மொயின் அலி என்ற வெளிநாட்டு வீரர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் போக கவுதம், ஹரி நிஷாந்த், புஜாரா ஆகிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கேவில் வெளிநாட்டு கோட்டா மொத்தமாக முடிவிற்கு வந்து இருக்கிறது.

வீரர்கள்

வீரர்கள்

இதனால் தற்போது சிஎஸ்கேவில் தோனி, ரெய்னா, டு பிளசிஸ் , அம்பதி ராயுடு, ஜெகதீசன், ரூத்துராஜ், சாம் கரன், ஜடேஜா, பிராவோ, சான்டனர், ஹஸல்வுட், ஷரத்துல் தாக்கூர், கரன் சர்மா, ஆசிப், இம்ரான் தாஹிர் , சாய் கிஷோர் , தீபக் சாகர், லுங்கி நிகிடி, மொயின் அலி, கவுதம், ஹரிசங்கர், பகவத் வர்மா, புஜாரா ஆகியோர் உள்ளனர் .

நான்கு பேர்

நான்கு பேர்

இதில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேவை என்பதால் பிராவோ , சாம் கரன் , டு பிளசிஸ் , மொயின் அலி ஆகிய நான்கு பேர் மட்டுமே அதிக போட்டிகளில் ஆடுவார்கள். இதனால் மற்ற வெளிநாட்டு வீரர்கள் பெரிய அளவில் மன வருத்தத்தில் உள்ளனர். அணியில் எடுக்கிறார்கள் ஆனால் வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று வருத்தத்தில் உள்ளனர்.

போன வருடம்

போன வருடம்

அதிலும் போன வருடமே லுங்கி நிகிடி அணியில் வாய்ப்பு இல்லை என்று வருத்தப்பட்டு இருந்தார். இம்ரான் தாஹிரும் இது தொடர்பாக வருத்தமாக பேட்டி அளித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வருடமும் நான்கு முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது ன்று கூறுகிறார்கள்.

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர், ஹஸல்வுட், லுங்கி நிகிடி, சான்டனர் ஆகிய நான்கு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என்று கூறுகிறார்கள். இதனால் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பம் இவர்களுக்கு பெரிதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

Story first published: Monday, February 22, 2021, 9:48 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+