இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கு.. இதை கூட கவனிக்கவில்லை.. சிஎஸ்கே செய்த தவறு.. ஷாக் பின்னணி!
சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எடுத்த ஏலம் காரணமாக பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆடும் 11 அணி கொண்ட வீரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த முறையும் சிஎஸ்கே அணியின் ஏலம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது.மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

வீரர்கள்
2021 ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எடுத்த ஏலம் காரணமாக பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆடும் 11 அணி கொண்ட வீரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நல்ல ஆப் ஸ்பின் பவுலர்கள் இல்லை.

ஸ்பின் பவுலர்கள்
இந்த நிலையில் இந்த சீசனில் ஆப் ஸ்பின் பவுலர்கள் அதிகம் வேண்டும் என்பதால் சிஎஸ்கே அணி ஆப் ஸ்பின் பவுலர்களை குறி வைத்தது. இதற்காக அணியில் மொயின் அலி மற்றும் கே கவுதம் எடுக்கப்பட்டனர். ஆனால் இதில்தான் காம்பினேஷன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எத்தனை
9.25 கோடி ரூபாய் கொடுத்து கவுதமை சிஎஸ்கே எடுத்தாலும் அவரை பயன்படுத்த வாய்ப்பு இல்லை. பிளே ஆப் தகுதி பெறும் வரை கவுதமை சிஎஸ்கே பயன்படுத்தாது என்கிறார்கள். காரணம் அணியில் ஏற்கனவே ஜடேஜா, மொயின் அலி ஆகிய இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருப்பார்கள்.

கூடுதல்
சாம் கரன், பவர் பிளேவில் பவுலிங் செய்ய சாகர், டெத் ஓவர் வீச பிராவோ ஆகியோர் ஆடுவார்கள். இதனால் சிஎஸ்கே அணியில் கவுதம் ஆடுவது கண்டிப்பாக சிக்கலான விஷயமாக இருக்கும். கவுதமுக்காக சாம் கரனை உட்கார வைக்க முடியாது.

ஜடேஜா
அதேபோல் ஜடேஜா போன்ற வீரரையும் உட்கார வைக்க முடியாது. பின் யாருக்கு மாற்று வீரராக இவரை சிஎஸ்கே எடுத்து இருக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. 9.25 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு இவர் முழுக்க முழுக்க வெட்டியாக இருக்க போகிறாரா என்று கேள்வி எழுந்து இருக்கிறது .


Click it and Unblock the Notifications