For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் எவ்வளவு நாள்தான் ஓரம்கட்டுவீங்க.. தோனிக்கு முறையான பாடம் எடுத்த தமிழக வீரர்.. செம சம்பவம்!

சென்னை: சிஎஸ்கே அணியில் இருக்கும் தமிழக வீரர் என் ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி புதிய வீரர்கள் 6 பேரை எடுத்து புதிய பொலிவு பெற்றுள்ளது. ஆப் ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது .

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சென்னை

சென்னை

சிஎஸ்கே அணியில் இருக்கும் தமிழக வீரர் என் ஜெகதீசன் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அறிமுக ஐபிஎல் போட்டியில் இவர் நன்றாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் ஸ்பார்க் இல்லை என்று கூறி ஓரம்கட்டப்பட்டார். தொடர்ந்து இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.

சையது முஷ்டாக்

சையது முஷ்டாக்

சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் இவர் சிறப்பாக ஆடினார். தமிழக அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஜெகதீசன் இந்த சீசனில் சிஎஸ்கேவில் ஆட வாய்ப்பு பெறுவார் என்று கருதப்பட்டது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஆனால் உத்தப்பா, மொயின் அலி போன்ற வீரர்கள் வந்து இருப்பதால் சிஎஸ்கே அணியில் மீண்டும் ஜெகதீசன் பேட்டிங் இறங்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர் சையது முஷ்டாக் கோப்பையில் நன்றாக ஆடி இருந்தாலும் சிஎஸ்கேவில் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்.

விஜய் ஹசாரே

விஜய் ஹசாரே

ஆனால் தொடர்ந்து தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் இவர் நன்றாக ஆடி வருகிறார். இன்று விஜய் ஹசாரே தொடரில் முதல் போட்டியிலேயே ஜெகதீசன் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த போட்டியில் இவர் 103 பந்தில் 101 ரன்கள் எடுத்துள்ளார்.

கிடைக்காது

கிடைக்காது

இவருக்கு ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்தும் தொடர்ந்து கவலையின்றி ஆடி வருகிறார். இவரின் ஆட்டம் இந்த முறை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. தோனி மனது வைத்தால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, February 20, 2021, 16:50 [IST]
Other articles published on Feb 20, 2021
English summary
IPL Auction 2021: CSK player N Jagadeesan playing very well in the Vijay Hazare Trophy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+