Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே அப்படி பேசுவீங்க? தப்பிக்கவே முடியாது.. தோனிக்கு சிஎஸ்கேவிற்கு உள்ளயே வைக்கப்பட்ட செக்!

சென்னை: சிஎஸ்கேவை சேர்ந்த இளம் வீரர்கள் அதிரடியாக ஆடுவது ஒரு பக்கம் சந்தோசத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் தோனிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது.

இந்த முறையும் சிஎஸ்கே அணியின் ஏலம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கேவில் தற்போது இருக்கும் இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். கடந்த சையது முஷ்டாக் தொடர் முழுக்க ஜெகதீசன் மிகவும் சிறப்பாக ஆடினார். லீக் போட்டிகள் முழுக்க தமிழக அணி வெற்றிபெற ஜெகதீசன்தான் காரணமாக இருந்தார்.

விஜய் ஹசாரே

விஜய் ஹசாரே

இன்னொரு பக்கம் தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் சதத்தோடு தனது வேட்டையை தொடங்கி இருக்கிறார். ஜெகதீசன் மட்டுமின்றி சாய் கிஷோர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். நேற்று இவர் ஒரு விக்கெட் எடுத்த நிலையில் கடந்த சையது முஷ்டாக் தொடர் முழுக்க பல விக்கெட்டுகளை எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

ஒவ்வொரு போட்டியிலும் 2-3 விக்கெட்டுகளை எடுத்து சாய் கிஷோர் தமிழக அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அதேபோல் சிஎஸ்கேவில் இணைந்து இருக்கும் ஹரி சங்கர் ரெட்டியும் சையது முஷ்டாக் தொடங்கி தற்போது விஜய் ஹசாரே போட்டிகள் வரை அனைத்திலும் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

சிக்கல்

சிக்கல்

இதனால் தோனிக்கு தற்போது சிஎஸ்கே அணிக்கு உள்ளேயே பெரிய செக் வைக்கப்பட்டு இருக்கிறது.இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தோனி தள்ளப்பட்ட இருக்கிறார்.மூத்த வீரர்கள் சொதப்பினால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார்.

கடந்த முறை

கடந்த முறை

கடந்த முறை போல ஸ்பார்க் இல்லை என்றெல்லாம் கூறி தோனி புறக்கணிப்பு வேலைகளை செய்ய முடியாது . ஒப்பனர்கள், ஸ்பின் பவுலர்கள் சொதப்பினால் அணிக்குள் ஜெகதீசன், சாய் கிஷோரை கொண்டு வர வேண்டிய கட்டாயம் தோனிக்கு ஏற்பட்டுள்ளது . முதல் தர போட்டிகளை தோனியும் கண்டிப்பாக கவனித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 21, 2021, 10:24 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+