Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவருக்கு எதுக்கு இவ்வளவு கோடி.. கர்நாடக வீரரை தேவையின்றி எடுத்த சிஎஸ்கே.. ஏலத்தில் நடந்த பரபரப்பு!

சென்னை: இளம் வீரர் கே கவுதம் சிஎஸ்கே அணியால் ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

2021 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் நினைத்தபடி அதிக தொகைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

ஷாருக்கான் போன்ற தமிழக வீரர்களும் இந்த சீசனில் கவனம் பெற்று அதிக ஏலத்திற்கு சென்றுள்ளனர்.

சென்னை

சென்னை

இளம் வீரர் கே கவுதமை எடுக்க ஐபிஎல் அணிகள் கடும் போட்டி நிலவியது. தொடக்கத்தில் இவரை எடுக்க மும்பை, பெங்களூர், கொல்கத்தா அணிகள் முயன்றது. ஆனால் அப்போதெல்லாம் சென்னை அணி இவரை எடுக்க முயற்சி செய்யவில்லை.

இளம் வீரர்

இளம் வீரர்

7 கோடி ரூபாய் தாண்டிய பின் இவரை எடுக்க சிஎஸ்கே அணி முயன்றது. சிஎஸ்கே அணியும் கவுதமை எடுக்க தீவிரமாக போட்டி போட்டது. 9 கோடி ரூபாய் தாண்டி இவர் ஏலம் கேட்கப்பட்டு வந்தார்.

 பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா கவுதம். முதல்தர போட்டிகளில் இவர் நன்றாக ஆடி இருக்கிறார். நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் நன்றாக ஆடினார். இந்த நிலையில் தற்போது இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இளம் வீரர்

இளம் வீரர்

இளம் வீரர் கே கவுதம் சிஎஸ்கே அணியால் ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை சிஎஸ்கே அணி ஏன் இவ்வளவு கோடி கொடுத்து எடுத்தது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. சிஎஸ்கேவில் இவர் பினிஷிங் வீரராக ஆட வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, February 18, 2021, 17:49 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+