ஆந்திராவின் பாகுபலி.. அவரை எடுங்க.. யாருக்கும் தெரியாத 2 வீரர்களை தூக்கிய சிஎஸ்கே.. என்ன நடந்தது?
சென்னை: பெரிய அளவில் பிரபலம் அடையாத இளம் வீரர்கள் எம். ஹரி சங்கர் ரெட்டி, பகத் வர்மா சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
2021 ஐபிஎல் ஏலத்தை சிறப்பாக தொடங்கிய சிஎஸ்கே அணி மீண்டும் சொதப்ப தொடங்கி உள்ளது. ஆரம்பமே மேக்ஸ்வெல்லுக்கு குறி வைத்து சிஎஸ்கே இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
அதன்பின் கே கவுதமை 9. 25 கோடி ரூபாய்க்கு எடுத்து அதிர்ச்சி கொடுத்தது. அதில் இருந்து வரிசையாக சிஎஸ்கே அணி மோசமான தேர்வுகளை செய்தது.

எப்படி
அதிலும் புஜாராவை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இவரை 50 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. டெஸ்ட் வீரரை சிஎஸ்கே எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கல்
இந்த நிலையில் தற்போது இரண்டு இளம் வீரர்களை சிஎஸ்கே எடுத்துள்ளது. அதன்படி தற்போது பிரபலம் அடையாத இளம் வீரர்கள் எம். ஹரி சங்கர் ரெட்டி, பகத் வர்மா சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

ஏலம்
இதில் எம். ஹரி சங்கர் ரெட்டி ஆந்திராவில் முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். வலதுகை பவுலர் ஆவார். பேட்டிங்கும் செய்ய கூடியவர். இவரை மாற்று வீரராக சிஎஸ்கே எடுத்துள்ளது.

இன்னொரு வீரர்
அதேபோல் பகத் வர்மா சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். இவரும் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். வலது கை ஆப் ஸ்பின் பவுலரான இவர் மாற்று வீரராக சென்னைக்குள் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications