Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்ன அந்த உருக்கமான வார்த்தை.. டி ஷர்ட் அடித்து சிஎஸ்கே அனுப்பிய மெசேஜ்.. இதை பாருங்க!

சென்னை: 2021 ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணி முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் நடந்து வருகிறது.

டேவிட் மாலன், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. தமிழக வீரர் ஷாருக்கான், கேரள வீரர் அசாருதீன் ஆகியோர் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் 2021 ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணி முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்தது.

ஐபிஎல்

ஐபிஎல்

கடந்த ஐபிஎல் சீஸனின் போது தோனியிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் ..இதுதான் உங்களுக்கு கடைசி போட்டியா.. மஞ்சள் உடையில் இனிமேல் நாங்கள் உங்களை பார்க்க முடியாதா என்று கேள்வி கேட்கப்பட்டது. தோனியின் ஓய்வு குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

தோனி

தோனி

இதற்கு பதில் அளித்த தோனி.. கண்டிப்பாக இல்லை, என்று ஒரே வாக்கியத்தில் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் definitely not என்று இதற்காக தோனி குறிப்பிட்டார். இதன் மூலம் தோனி தான் ஓய்வு பெற போவதில்லை என்பதை உறுதி செய்தார். தோனி குறிப்பிட்ட இந்த வாக்கியம் பெரிய அளவில் வைரலானது.

வாக்கியம்

வாக்கியம்

இந்த நிலையில் இதே definitely not என்ற வாக்கியத்தை தங்களின் ஸ்லோகன் போல சிஎஸ்கே அணி நிர்வாகிகள் வடிவமைத்துள்ளனர். ஏலத்திற்கு வந்திருக்கும் சிஎஸ்கே நிர்வாகிகள் தங்கள் டி ஷர்ட்டில் definitely not என்ற வாக்கியத்தை வைத்துள்ளனர். மற்ற அணிகளுக்கு மெசேஜ் போல இதை வடிவமைத்துள்ளனர் .

மெசேஜ்

மெசேஜ்

அதன்படி இந்த முறை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் கண்டிப்பாக திருப்பி கொடுப்போம் என்று சிஎஸ்கே அணி சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதனால் ஏலத்தில் அதற்கு ஏற்றபடி சிஎஸ்கே அணி வீரர்களை எடுக்கும்.

Story first published: Thursday, February 18, 2021, 14:26 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+