
சென்னை
நேற்று மினி ஏலம் முடிந்த பின் சிஎஸ்கே அணி நிர்வாகிகளுக்கு கேப்டன் தோனி போன் செய்து பேசி இருக்கிறார். நேற்று நடந்த ஏலத்திற்கு தோனி வரவில்லை. சிஎஸ்கே சிஇஓ காசி விசுவநாதன், எல் பாலாஜி உள்ளிட்டோர் ஏலம் எடுப்பதற்காக வந்து இருந்தனர். இந்த ஏலத்தில் தொடக்கத்தில் இருந்து சென்னை அணி சிறப்பாக ஏலம் எடுத்தது.

போன்
இந்த ஏலத்திற்கு தோனி வரவில்லை என்றாலும் அவர் போன் மூலம் தொடர்பிலேயே இருந்தார். சிஎஸ்கே நிர்வாகிகளுடன் போனில் பேசினார். அதேபோல் உணவு இடைவேளையிலும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். யாரை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தார்.

14 கோடி
மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய் வரை முயற்சி செய்தது. இதுவும் கூட தோனி கொடுத்த அறிவுரைதான் என்கிறார்கள். தோனிதான் 14 கோடி வரை செல்லுங்கள் , மேக்ஸ்வெல்லை எடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார். இதனால்தான் அவரை முயன்று உள்ளனர்.

மொயின் அலி
மேக்ஸ்வெல் கிடைக்கவில்லை என்றதும்தான் மொயின் அலி மற்றும் கவுதம் இருவரையும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எடுங்கள் என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். இது எல்லாம் தோனி கொடுத்த ஆலோசனை மற்றும் ஐடியா என்று கூறுகிறார்கள்.

பாராட்டு
இதனால் நேற்று ஏலத்திற்கு பின் தோனி சிஎஸ்கே நிர்வாகிகளுக்கு போன் செய்து இருக்கிறார். சிஎஸ்கே நிர்வாகிகளை தொடர்பு கொண்ட ஏலம் குறித்து பேசியதோடு, எல்லோரையும் பாராட்டி இருக்கிறார். நினைத்தபடி வீரர்களை எடுத்துள்ளீர்கள் என்று தோனி பாராட்டியதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications