Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிரித்தபடி பார்த்தனர்.. சிஎஸ்கே ஏலம் பற்றி கம்பீர் சொன்ன அந்த வார்த்தை.. என்ன இப்படி பேசிட்டாரு!

சென்னை: சிஎஸ்கே அணியின் ஏலம் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது.

இந்த முறையும் சிஎஸ்கே அணியின் ஏலம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

பொதுவாக சிஎஸ்கே அணியை, அதன் கேப்டன் தோனியை விமர்சனம் செய்யும் கம்பீர் இந்த முறை சிஎஸ்கே அணியின் ஏலத்தை பாராட்டி இருக்கிறார். அதில்., ஒவ்வொரு அணியும் தங்கள் அணியை புதுப்பித்து இருக்கிறது. ஆனால் சிஎஸ்கேவிற்கு அப்படி ஒரு தேவை இல்லை. பெரிய மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இல்லை.

சீசன்

சீசன்

கடந்த சீசன் அந்த அணிக்கு மோசமாக இருந்தது. ஆனாலும் அந்த அணியில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். இதனால்தான் அந்த அணி வெறும் 3 வீரர்களை தொடக்கத்தில் தேர்வு செய்தது. அதன்பின் அமைதியாக உட்கார்ந்து சந்தோசமாக ஏலத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

ஏலம்

ஏலம்

சிஎஸ்கே அணி மற்ற அணிகளை விட சிறப்பாக ஏலம் எடுத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இப்படித்தான் ஒரு அணியை எடுக்க வேண்டும். ஒரு வலிமையான அணியை, திறமையான அணியை, பெருமைமிக்க அணியை இப்படித்தான் உருவாக்க வேண்டும்.

நீண்ட ஏலம்

நீண்ட ஏலம்

சிஎஸ்கே தற்போது உருவாக்கிய அணி நீண்ட காலத்திற்கு வர கூடிய அணியாகும். மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே அணி கடுமையாக முயன்றது. பின் அதே விலைக்கு இரண்டு வீரர்களை அந்த அணி எடுத்தது. மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை எடுத்தது.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டிய விலைக்கு சிஎஸ்கே அணி இரண்டு ஆல் ரவுண்டர்களை ஏலம் எடுத்து உள்ளது. மற்ற அணிகள் பெரிய வீரர்களை எடுத்து இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் எடுத்துள்ளது.

எப்படி எடுக்க வேண்டும்

எப்படி எடுக்க வேண்டும்

இப்படித்தான் ஏலம் எடுக்க வேண்டும். பெரிய தொகை கொடுத்து வீரர்களை எடுக்க வேண்டும் என்று இல்லை . தேவையான வீரர்களை திட்டமிட்டு எடுத்தால் போதும். அதைத்தான் சிஎஸ்கே தற்போது செய்துள்ளது, என்று கவுதம் கம்பீர் குறித்தனர்.

Story first published: Friday, February 19, 2021, 16:17 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+