Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க.. சிஎஸ்கேவை நடுஆற்றில் விட்டுவிட்டு.. ஹர்பஜனுக்கு பேச்சை பாருங்க!

சென்னை: கொல்கத்தா அணியில் இணைந்து இருக்கும் ஹர்பஜன் சிங்கை சிஎஸ்கே ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் 2021 ஏலம் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் ஐபிஎல் தொடருக்காக காத்து இருக்கிறது. இந்த முறை ஒவ்வொரு அணியும் வித்தியாசமான வீரர்களை ஏலம் எடுத்து இருக்கிறது.

சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது.மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

இல்லை

இல்லை

2020 ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே அணியில் ஹர்பஜன் விலகினார். குடும்ப காரணங்களை குறிப்பிட்டு தொடரில் இருந்து ஹர்பஜன் வெளியேறினார். அதன்பின் தொடர் முழுக்க அவர் கலந்து கொள்ளவில்லை.

நீக்கம்

நீக்கம்

ஹர்பஜன் இப்படி வெளியேறிய காரணத்தால் சிஎஸ்கேவில் ஸ்பின் பிரச்சனை ஏற்பட்டது. சிஎஸ்கேவின் தோல்விக்கும் கூட இதுவே காரணமாக இருந்தது. இதனால் ஹர்பஜன் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

கொல்கத்தா

கொல்கத்தா

இதனால் 2021 மினி ஏலத்திற்கு முன் ஹர்பஜன் சிஎஸ்கே அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடி ரூபாய்க்கு ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டார்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் கொல்கத்தா அணியில் ஆடுவது குறித்து ஹர்பஜன் பேசி உள்ளார். அதில், கொல்கத்தா அணியில் ஆடுவது சந்தோசம் அளிக்கிறது. பர்பிள் நிற அணியோடு இணைவது மகிழ்ச்சி கொடுக்கிறது . என்னை அணியில் எடுத்ததற்கு நன்றி.

 சர்ச்சை

சர்ச்சை

நான் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவேன். கொல்கத்தா அணிக்கு 100 உழைப்பை கொடுப்பேன். விரைவில் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன், என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். ஹர்பஜனின் இந்த பேச்சை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

சிஎஸ்கேவை பாதியில் விட்டுவிட்டு 100% உழைப்பு குறித்து நீங்கள் பேசலாமா? அணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை குறித்து நீங்கள் பேசலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஹர்பஜன் சென்னை அணியை ஏமாற்றிவிட்டதாக பல நெட்டிசன்கள் புகார் வைத்துள்ளனர்.

Story first published: Saturday, February 20, 2021, 9:39 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+