Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேதான் ஒரே அச்சுறுத்தல்.. சரியாக திட்டமிட்ட கோலி..தோனியின் பிளானை காலி செய்தது எப்படி? பின்னணி

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டது எப்படி என்று விவரம் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே அணி எடுக்க தீவிரமாக முயன்றது. இவரை எடுக்க பல அணிகள் போட்டிபோட்டது.

பெங்களூர்

பெங்களூர்

இந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 14.25 கோடி ரூபாய் கொடுத்து இவர் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி மேக்ஸ்வெல்லை எடுக்க முயன்றது. சிஎஸ்கே அணியில் பெரிதாக ஆல் ரவுண்டர் இல்லை.

திட்டம்

திட்டம்

இதனால் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே குறி வைத்தது. . ஆனால் பெங்களூர் அணி இவரை விடுவதாக இல்லை. எவ்வளவு ஆனாலும் மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டும் என்று பெங்களூர் அணி இருந்தது. பல கோடிகளை கொடுத்து இவரை ஏலம் எடுக்க பெங்களூர் தயாராக இருந்தது.

முறையான பிளான்

முறையான பிளான்

இவரை ஏலம் எடுப்பதற்காக பெங்களூர் அணி முறையான திட்டத்துடன் களத்திற்கு வந்து இருக்கிறது. ஏலத்திற்கு முதல் நாள் ஏலம் போல பெங்களூர் அணி ஒத்திகை பார்த்து இருக்கிறது. மேக்ஸ்வெல்லை எடுக்க எவ்வளவு கோடி வரை முயற்சி செய்யலாம் என்று ஒத்திகை பார்த்து 15 கோடி ரூபாய் வரை சென்று இருக்கிறார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

மேக்ஸ்வெல்லுக்கு முன்பு ஏலம் விடப்படும் வீரர்கள், மேக்ஸ்வெல்லுக்கு பிறகு ஏலம் விடப்படும் வீரர்களை வைத்து இந்த ஒத்திகையை நடத்தி மேக்ஸ்வெல்லை அணியில் எடுத்துள்ளனர். இதில் சிஎஸ்கே கண்டிப்பாக மேக்ஸ்வெல்லுக்கு குறி வைக்கும் என்று கணித்து உள்ளனர். சிஎஸ்கேதான் ஒரே அச்சுறுத்தல் என்று கோலி நினைத்து இருக்கிறார்.

15 கோடி

15 கோடி

சிஎஸ்கேவிடம் 19 கோடி ரூபாய் இருந்ததால் மேக்ஸ்வெல்லுக்கு 15 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே செல்லும் என்று பெங்களூர் கணித்து இருக்கிறது. இதனால் அதற்கு ஏற்றபடி மேக்ஸ்வெல்லுக்கு 15 கோடி அல்லது அதற்கும் மேல் கொஞ்சம் கொடுக்க பெங்களூர் அணி முடிவு செய்து அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்து உள்ளனர். இந்த திட்டம் மூலமே 14.25 கோடி ரூபாய் கொடுத்து மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்துள்ளது.

Story first published: Tuesday, February 23, 2021, 10:53 [IST]
Other articles published on Feb 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+