Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நொடியில் ஓரம்கட்டிய தோனி.. சிஎஸ்கேவை அவ்வளவு நம்பினாரே.. கடைசியில் இப்படி போய் பண்ணலாமா?

சென்னை: சிஎஸ்கே அணியில் இந்த முறையாவது ஆடலாம் என்று கனவில் இருந்த இம்ரான் தாஹிர் பெரிய அளவில் ஏமாற்றம் அடைவார் என்று கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி 6 வீரர்களை எடுத்துள்ளது. 3 அனுபவ வீரர்கள், 3 இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.

அணியின் பேட்டிங், பவுலிங் வலிமையாக இருக்கிறது. ஆனால் ஓப்பனிங் ஜோடி அவ்வளவு வலிமையாக காணப்படவில்லை.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தற்போது பவுலிங் படை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கேவில் மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் போன்ற வீரர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர். இரண்டு பேருமே ஸ்பின் பவுலர்கள். இவர்கள் இன்னும் சில பவுலர்கள் உள்ளனர்.

ஜடேஜா

ஜடேஜா

ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகிய ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். இதில் ஜடேஜாவிற்கும், மொயின் அலிக்கும் அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங் ஆப்ஷன் காரணமாக இவர்கள்தான் சென்னை அணியில் ஆடுவார்கள்.

 வெளிநாட்டு வீரர்

வெளிநாட்டு வீரர்

இவர்கள் போக வெளிநாட்டு வீரர்களில் பிராவோ , சாம் கரன் ஆகிய இரண்டு பவுலர்கள் ஆடுவார்கள். டு பிளசிஸ் வேறு ஓப்பனிங் இறங்குவார் என்பதால் மொத்தமாக 4 வெளிநாட்டு வீரர்களின் கோட்டா முடிந்துவிட்டது. இதனால் இம்ரான் தாஹிர் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.

 பேட்டிங் ஆப்ஷன்

பேட்டிங் ஆப்ஷன்

பேட்டிங் ஆப்ஷன் வேண்டும் என்பதால் அலிக்குதான் அதிக வாய்ப்பு கிடைக்கும். சிஎஸ்கே அணியில் கடந்த வருடமே ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் இம்ரான் தாஹிர் பவுலிங் செய்தார். மற்ற போட்டிகளில் இவர் கூல் ட்ரிங்ஸ் மட்டுமே சுமந்து சென்றார்.

சிஎஸ்கே வாய்ப்பு

சிஎஸ்கே வாய்ப்பு

அப்போதே எனக்கு சிஎஸ்கேவில் ஆட விருப்பம். இந்த அணியில் இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது என்று கூறினார். 2019ல் இவர்தான் அதிக விக்கெட் எடுத்த வீரர். ஆனால் மொயின் அலி வரவால் இந்த வருடமும் இம்ரான் தாஹிர் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, February 19, 2021, 15:49 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+