Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்ன வயசு பையன்.. ஐபிஎல் ஏலம் நடக்குறப்ப.. திடீர்ன்னு இவர் ஏன் டிரெண்ட் ஆகறாரு? அதுதான் நடக்குமோ?

சென்னை: 2021 ஐபிஎல் ஏலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முக்கியமான வீரர் ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது. சென்னையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எடுக்க போகும் வீரர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். சிஎஸ்கே அணி 6 வீரர்களை எடுக்க உள்ளது.

 எப்படி

எப்படி

இந்த நிலையில் 2021 ஐபிஎல் ஏலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முக்கியமான வீரர் ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் அதிக கவனத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்திய அணியில் இடம்பெறாத சில வீரர்களும் கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

யார்

யார்

டேவிட் மாலன், மேக்ஸ்வெல், ஸ்மித், ஆரோன் பின்ச், கைலி மேயர்ஸ், ஷாகிப் அல் ஹசன் போன்ற வீரர்கள் பெரிய அளவில் இந்த சீசனில் கவனிக்கப்படுவார்கள். அதேபோல் ஷாருக்கான், முகமது அசாருதீன் போன்ற வீரர்களும் இந்த ஏலத்தில் அதிகம் கவனிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை இளம் பவுலர் ஜெய் ரிச்சர்ட்சன் இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். இவருக்கு வெறும் 24 வயதுதான் ஆகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் அங்கு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்தார். 4 வருடமாக சர்வதேச போட்டிகளில் ஆடினாலும் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார்.

எப்படி

எப்படி

சர்வதேச டி 20 போட்டிகளில் 62 போட்டிகளில் ஜெய் ரிச்சர்ட்சன் 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் பிபிஎல் தொடரில் பெர்த் அணிக்காக மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த நிலையில் இவரை தங்கள் அணியில் எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.

ஜெய் ரிச்சர்ட்சன்

ஜெய் ரிச்சர்ட்சன்

இதனால் ஜெய் ரிச்சர்ட்சன் என்ற பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய மினி ஏலத்தில் ஜெய் ரிச்சர்ட்சன்தான் அதிக தொகைக்கு போக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.இவர் இன்று புதிய சாதனை படைக்க வாய்ப்புகள் உள்ளது. ஜெய் ரிச்சர்ட்சனை ராஜஸ்தான், டெல்லி, பெங்களூர் அணிகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Thursday, February 18, 2021, 12:51 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+