Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு திமிர்.. சிஎஸ்கேவை காலி செய்துவிட்டு.. இப்போ பேச்சை பாருங்கள்.. வைரலாகும் ஜாதவ் வீடியோ!

சென்னை: ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் ஜாதவ் பேட்டி அளித்துள்ளார்.

2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. ஹைதராபாத் அணி இதில் மிகவும் குறைவான வீரர்களை ஏலம் எடுத்தது. பெரிய அளவில் வீரர்களை ரிலீஸ் செய்யாத காரணத்தால் குறைவான வீரர்களை மட்டுமே ஏலம் எடுத்தது.

இந்த முறையும் சிஎஸ்கே அணியின் ஏலம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

சென்னை

சென்னை

கடந்த சீசனில் கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக ஆடினார். சிஎஸ்கே அணியில் இவர் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தார். டெஸ்ட் அணியில் ஆடுவது போல இவர் மிகவும் மோசமாக, மெதுவாக ஆடினார். சிஎஸ்கேவின் தோல்விக்கு பல போட்டிகளில் இவர் காரணமாக இருந்தார் .

நீக்கம்

நீக்கம்

இதனால் இவரை நீக்க வேண்டும் என்று கடுமையான கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏலத்தை தொடர்ந்து கேதார் ஜாதவ் சில வாரம் முன் சிஎஸ்கே அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் நேற்று கேதார் ஜாதவை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது.

மோசம்

மோசம்

இவரை 2 கோடி ரூபாய்க்கு கேதார் ஜாதவ் ஏலம் எடுத்தது. இந்த நிலையில் ஜாதவை ஹைதராபாத் அணி ஏலம் எடுத்ததை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மிகவும் மோசமாக ஆடிய வீரரை ஏன் 2 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பேச்சு

இந்த நிலையில் ஹைதராபாத் அணியில் இணைந்ததை கேதார் ஜாதவ் சந்தோசமாக பகிர்ந்து இருக்கிறார். என்னை அணியில் எடுத்த ஹைதராபாத் அணிக்கு நன்றி. வரும் சீசனில் ஹைதராபாத் அணிக்காக நன்றாக ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த அணியின் வெற்றியில் பங்கு வகிக்க விரும்புகிறேன்.

எனக்கு வாய்ப்பு

எனக்கு வாய்ப்பு

எனக்கு வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகத்திற்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஆரஞ்சு ஆர்மியை சந்திப்பதில் மகிழ்ச்சி, என்று கேதார் ஜாதவ் குறிப்பிட்டுள்ளார். ஜாதவின் இந்த பேச்சை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

சிஎஸ்கே அணியில் மோசமாக ஆடி அந்த அணியை காலி செய்தீர்கள். இப்போது நீங்கள் இப்படி பேசலாமா? ஆட்டம் மீது கவனம் செலுத்துங்கள், மீண்டும் பார்மிற்கு திரும்புங்கள்.. ஆரஞ்ச் ஆர்மியை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Story first published: Friday, February 19, 2021, 16:04 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+