Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கூல்டிரிங்ஸ் தூக்க முடியாது.. பட்ட அவமானமே போதும்..ஐபிஎல்லில் இருந்து விலகிய வீரர்..காரணம் சிஎஸ்கே!

சென்னை: 2021 ஐபிஎல் ஏலம் இன்று நடக்க உள்ள நிலையில் முக்கியமான வீரர் ஒருவர் திடீரென ஏலத்தில் இருந்து விலகி இருக்கிறார் .

ஏப்ரல் மாதம் நடக்க உள்ள 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடக்கிறது. இன்றி பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் மினி ஏலம் நடக்க உள்ளது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் இன்று மொத்தம் 291 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். 1000க்கும் அதிகமான வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தாலும் இதில் 291 வீரர்களின் பெயர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

எப்படி

எப்படி

முதலில் 292 வீரர்களின் பெயர்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் கடைசியில் மார்க் வுட் ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டதால் அவரின் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. ஏலத்தில் என் பெயரை சேர்க்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று

நேற்று

நேற்று மாலைதான் மார்க் வுட் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மார்க் வுட் இங்கிலாந்து அணியை சேர்ந்த மூத்த வீரர் ஆவார். இவர் 2018ல் சிஎஸ்கே அணியில் ஆடினார் . ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

 ஒரே போட்டி

ஒரே போட்டி

ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நல்ல பவுலராக இவர் இருந்தாலும் இவருக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பெரும்பாலும் இவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். அல்லது கூல் டிரிங்ஸ் தூக்க வைக்கப்பட்டார்.

 மோசமான நிலை

மோசமான நிலை

இதனால் இந்த வருட சீசனில் அவர் கலந்துகொள்ளவில்லை. வயதாகிவிட்டது, விருப்பம் இல்லை, இங்கிலாந்து அணிக்கான ஆட்டத்தில் கவனம் செலுத்த போகிறேன் என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

பல வீரர்கள்

பல வீரர்கள்

மார்க் வுட்டுக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை தொகை விதிக்கப்பட்டு இருந்தது . வெளிநாட்டு வீரர்கள் சிலர் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லை. கொரோனா பயோ பபுள் விதிகள் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Story first published: Thursday, February 18, 2021, 13:21 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+