எவ்வளவு பேசுனீங்க.. இதெல்லாம் தேவையா? சிஎஸ்கே துரத்திய வீரர்களுக்கு இப்படி ஒரு நிலையா? பரிதாபம்
சென்னை: சிஎஸ்கே அணி ரிலீஸ் செய்த மூத்த வீரர்கள் கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங் இரண்டு பேருமே ஏலம் எடுக்கப்படவில்லை.
2021 ஐபிஎல் ஏலம் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி இதுவரை மேக்ஸ்வெல் மற்றும் மொயீன் அலி மீது ஆர்வம் காட்டியது.
இதில் மேக்ஸ்வெல்லை அந்த அணி எடுக்க முடியவில்லை. இதனால் மொயின் அலியை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.

எப்படி
இந்த நிலையில் சிஎஸ்கே அணி சிஎஸ்கே அணி ரிலீஸ் செய்த மூத்த வீரர்கள் கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங் இரண்டு பேருமே ஏலம் எடுக்கப்படவில்லை. இந்த ஏலத்திற்கு முன் சிஎஸ்கே வீரர்கள் கேதார் ஜாதவ், ஹர்பஜன், முரளி விஜய், வாட்சன் போன்ற வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டனர்.

எடுக்கப்படவில்லை
இதில் கேதார் ஜாதவ் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் இவர் மிகவும் மோசமாக ஆடினாஏ. இதனால் இவர் இந்த சீசனிலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

ஹர்பஜன்
அதேபோல் ஹர்பஜன் சிஎஸ்கே அணியை மதிக்காமல் கடந்த வருடம் தொடரில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார். அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

மோசம்
ஹர்பஜன் மீது எந்த அணியும் நம்பிக்கை வைக்கவில்லை என்பது உறுதியாகிறது.. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறியதால் பியூஸ் சாவ்லா மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளார். பியூஸ் சாவ்லா மும்பை அணி மூலம் 2.4 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications