Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் அடுத்த வருஷ கேப்டன்.. இளம் வீரருக்கு வழிவிடும் ரோஹித்? மும்பை அணியில் பரபரப்பு மாற்றம்?

சென்னை: 2022 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள். ரோஹித் சர்மாவின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்கு 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை ஒவ்வொரு அணியும் உருவாக்கி உள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகள் இந்த ஏலத்திற்கு பின் மொத்தமாக மாற்றம் அடைந்து இருக்கிறது.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

2021 ஐபிஎல் ஏலம் மினி ஏலம்தான் என்பதால் ஒவ்வொரு அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால் 2022ல் பெரிய ஏலம் நடக்க உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் தயாராகி வருகிறது. இதில் புதிதாக ஒரு ஐபிஎல் அணியும் சேர்க்கப்பட உள்ளது.

எல்லா அணிகள்

எல்லா அணிகள்

இதன் காரணமாக மொத்தமாக எல்லா அணிகளும் கலைக்கப்பட்டு புதிய அணிகள் உருவாக்கப்படும். சிஎஸ்கே, பெங்களூர் அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் மிக வலிமையான மும்பை அணி மொத்தமாக கலைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

ஏலம்

ஏலம்

இந்த ஐபிஎல் ஏலத்தில் 3 இந்திய வீரர்கள் வரை ரீ டெயின் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 2022 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள். ரோஹித் சர்மாவின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

அதன்படி இஷான் கிஷான் அல்லது சூர்ய குமார் யாதவ் இருவரில் ஒருவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் . ரோஹித் சர்மா அதே அணியில் மூத்த வீரராக இருந்து புதிய கேப்டனை வழி நடத்துவார். ஆனால் கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

பல அணிகள்

பல அணிகள்

மும்பை மட்டுமின்றி சிஎஸ்கேவிலும் இதேபோல் கேப்டன்சி மாற்றம் நடக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் இந்த வருடம்தான் பல ஐபிஎல் கேப்டன்களுக்கு கடைசி கேப்டன்சி தொடராக இருக்கும் என்கிறார்கள். இதனால் இந்த வருடம் கோப்பையை வெல்ல பல அணிகள் முயற்சி செய்யும் என்கிறார்கள்.

Story first published: Monday, February 22, 2021, 10:26 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+