Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நைட் கிளப்தான் காரணம்.. வாழ்க்கையை முடக்கி போட்ட போதை பொருள்.. ஐபிஎல் ஏலத்தில் நடந்த பரபர சம்பவம்!

சென்னை: நேற்று ஐபிஎல் 2021 ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான வீரர் ஒருவர் ஏலம் எடுக்கப்படாதது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

மிகவும் பரபரப்பாக சென்ற 2021 ஐபிஎல் ஏலம் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. நேற்று மொத்தம் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

பல வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு இதில் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர். ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் அதற்கு ஏற்றபடி வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்

எபேபாடி

எபேபாடி

நேற்று ஐபிஎல் 2021 ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான வீரர் ஒருவர் ஏலம் எடுக்கப்படாதது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இந்த ஏலத்தில் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் இவரை எடுக்க முயற்சி செய்யவில்லை .

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸ்

உலகம் முழுக்க இவர் பல டி 20 லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். எல்லா லீக் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறார். அதோடு மிக முக்கியமாக இங்கிலாந்தில் நடக்கும் லோக்கல் கிளப் போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

போதை பொருள்

போதை பொருள்

ஆனால் இவர் போதை பொருள் பயன்படுத்திய காரணத்தால் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2019 உலகக் கோப்பை தொடருக்கு முன் நைட் கிளப் ஒன்றில் அலெக்ஸ் ஹேல்ஸ் கைது செய்யப்பட்டார். அப்போது மிக அதிக அளவில் இவர் போதை பொருள் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊக்கமருந்து

ஊக்கமருந்து

இது ஊக்கமருந்து இல்லையென்றாலும் இவரை அதன்பின் இங்கிலாந்து அணிக்குள் எடுக்கவில்லை. இது அவமானமான விஷயம் என்று கருதி மொத்தமாக இங்கிலாந்து அணி அலெக்ஸ் ஹேல்ஸை அணியில் எடுக்கவில்லை. பல போட்டிகளில் நன்றாக ஆடியும் கூட கடந்த இரண்டு வருடமாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஆடி கவனம் பெறலாம். மீண்டும் இங்கிலாந்து அணிக்குள் வரலாம் என்று நினைத்தார். ஐபிஎல் போட்டிகள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும் என்று அலெக்ஸ் ஹேல்ஸ் நம்பிக்கொண்டு இருந்தார்.

நம்பினார்

நம்பினார்

ஐபிஎல் தொடர் இவர் தனது வாழ்க்கையை மாற்றும், மீண்டும் பிரபலம் அடையலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் அணிகளும் இவரை எடுக்க மறுத்துவிட்டது. எல்லாம் இவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

 மோசம்

மோசம்

இவருக்கு தற்போது 32 வயதாவதால் மீண்டும் இங்கிலாந்து அணிக்குள் வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.ஒரே ஒரு நாள் இரவு அலெக்ஸ் ஹேல்ஸ் செய்த தவறு, வாழ்நாள் முழுக்க இவருக்கு சிக்கலாக மாறியுள்ளது. அதிரடி மன்னன் என்று பெயர் பெற்ற இவரின் கிரிக்கெட் கெரியர் முடியும் நிலைக்கு சென்றுள்ளது .

Story first published: Friday, February 19, 2021, 12:47 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+