நட்டு முதல் ஷாருக்கான் வரை..தமிழர்களுக்கு தொடர்ந்து அடையாளம் தரும் பிரீத்தி..பின்னணியில் செம காரணம்
சென்னை: ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதிலும், அவர்களுக்கு புதிய அடையாளம் அமைத்து தருவதிலும் பஞ்சாப் அணி ஓனர் பிரீத்தி ஜிந்தா முக்கிய பங்கு வகிக்கிறார்.
பொதுவாக ஐபிஎல் ஏலம் என்றால் பஞ்சாப் அணிக்கும் சென்னை அணிக்கும் கடும் போட்டி நிலவும். சென்னை அணி எடுக்கும் வீரர்களை எல்லாம் பஞ்சாப் அணி கடுமையாக போட்டி போட்டு வாங்க முயலும்.
சென்னை அணியை போலவே லோகோ தொடங்கி அணியின் பெயர் வரை காப்பி அடிப்பதே பஞ்சாப் அணிக்கு வேலை. ஆனால் இதே பஞ்சாப் அணிதான் பல தமிழக வீரர்களை அடையாளப்படுத்தி உள்ளது.

எப்படி
பஞ்சாப் அணியின் ஓனர் பிரீத்தி ஜிந்தா, ஆலோசகர் சேவாக் உள்ளிட்டோர் தொடர்ந்து தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்கள். தற்போது ஹைதராபாத் அணியில் ஆடி தேசிய அணியில் கலக்கி வரும் நடராஜன் இதே பஞ்சாப் அணியில் அறிமுகம் ஆனவர்தான். இங்குதான் இவரின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது.

சேவாக்
நடராஜனின் திறமை குறித்து சேவாக் சொல்ல, பிரீத்தி ஜிந்தா இவரை அணியில் எடுத்துக் கொண்டார்.அதன்பின்தான் நடராஜன் வாழ்க்கை மாறியது. அதன்பின் மீண்டும் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி தொடர்ந்து ஊக்கப்படுத்தியது. இந்த ஏலத்திற்கு முன் எல்லா வீரர்களையும் ரிலீஸ் செய்தாலும் கூட முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி ரிலீஸ் செய்யவில்லை.

நீக்கம்
அதேபோல் 2018 -2019 சீசன்களில் அஸ்வினை கேப்டனாக நியமித்தது பிரீத்தி ஜிந்தாதான். இதற்காக சிஎஸ்கேவிடம் அஸ்வினை ரீடெயின் செய்ய வேண்டாம் என்றும் கூட டீலிங் பேசினார்கள். தமிழக வீரர்கள் மீது பிரீத்தி ஜிந்தாவிற்கு அந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது.

ஷாருக்கான்
இந்த நிலையில் தமிழக வீரர் ஷாருக்கானை 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளார். பஞ்சாப் அணியில் பினிஷர் இல்லாத நிலையில் இவரை கடுமையாக போட்டி போட்டு பிரீத்தி ஜிந்தா எடுத்துள்ளார். இன்னொரு தமிழக வீரருக்கும் பிரீத்தி ஜிந்தா வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

வாய்ப்பு
தமிழக பவுலர்களை பிரீத்தி அதிகம் நம்புகிறார். தமிழக பவுலர்கள் நன்றாக செயல்படுவார்கள்., ஆல் ரவுண்டர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று பிரீத்தி ஜிந்தா நம்புகிறார். இதுதான் அவர் தமிழர்களை தொடர்ந்து குறி வைக்க காரணம். அணி தேர்வு குழுவிலும் சில முக்கிய தமிழர்கள் இருப்பதால் எளிதாக தமிழக வீரர்களை பிரீத்தி ஜிந்தா அடையாளம் காண்கிறார்.


Click it and Unblock the Notifications