பல வருட ஏக்கம்.. புறக்கணிப்பு.. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டை எடுத்து அதிர்ச்சி தந்த சிஎஸ்கே.. பிளானே வேறு!
சென்னை: இந்திய டெஸ்ட் வீரர் புஜாராவை சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
2021 ஐபிஎல் தொடர் எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது . இதுவரை சிஎஸ்கே அணி கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி ஆகிய வீரர்களை எடுத்தது.
இந்த ஏலத்தில் இதுவரை சிஎஸ்கே அணி மூத்த வீரர்களை மட்டுமே எடுத்துள்ளது. கடந்த முறை போல இந்த முறையும் மூத்த வீரர்களுக்கு மட்டுமே சிஎஸ்கே குறி வைக்கிறது.

எப்படி
சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் மற்றும் ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் தேவையாக இருந்தனர். இதற்கு ஏற்றபடி சிஎஸ்கே அணி மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை ஏலம் எடுத்தது. ஆனால் வேறு வீரர்களை சிஎஸ்கே பெரிதாக குறி வைக்கவில்லை.

புஜாரா
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக புஜாராவை சிஎஸ்கே எடுத்துள்ளது. புஜாராவை சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டை ஏலம் எடுத்தது சிஎஸ்கே. புஜாரா ஐபிஎல் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்.

சிஎஸ்கே
முக்கியமாக இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் புஜாரா இப்படி ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுவது விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் கடந்த வருடம் சையது முஸ்டாக் கோப்பை போட்டியில் எல்லாம் புஜாரா சிறப்பாக ஆடினார்.

சையது முஷ்டாக்
சவுராஷ்டிரா அணிக்காக ஆடிய புஜாரா அந்த அணிக்காக டி 20யில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் 66 பந்தில் சதம் அடித்து இவர் கவனம் ஈர்த்தார். இவர் 66 பந்தில் சதம் அடித்தது பெரிய அளவில் கவனம் பெற்றது.

ஏலம்
இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இவர் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் மாற்று ஓப்பனிங் வீரராக எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் பல வருடமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது சிஎஸ்கே அணி இவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது .


Click it and Unblock the Notifications