Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏலம் முடிந்து 3 நாட்களுக்கு பின்.. ஐபிஎல் தொடரில் திருப்பம்.. 2 அணிகள் எடுத்த முடிவால் பரபரப்பு!

சென்னை: 2021 ஐபிஎல் முடிந்துள்ள நிலையில் அணிகளுக்கு இடையில் மீண்டும் வீரர்களை மாற்றிக்கொள்ளும் டிரேடிங் முறை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது .

ஐபிஎல்

ஐபிஎல்

2021 ஐபிஎல் முடிந்துள்ள நிலையில் அணிகளுக்கு இடையில் மீண்டும் வீரர்களை மாற்றிக்கொள்ளும் டிரேடிங் முறை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை மூலம் ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை வெளியேற்றிவிட்டு வேறு அணியில் இருக்கும் வீரர்களை வாங்க முடியும். வீரர்களை டிரேட் செய்து அணியில் மாற்றங்களை செய்ய முடியும்.

 திருப்பம்

திருப்பம்

தற்போது ஏலம் முடிந்துள்ளதால் மீண்டும் வீரர்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை இந்த டிரேடிங் அனுமதிக்கப்படும். இப்படிப்பட்ட நிலையில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் டிரேடிங் நடக்க உள்ளது என்று கூறுகிறார்கள்.

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் அணியில் இருக்கும் சர்ப்ரஸ் கான் ஹைதராபாத் அணிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளார். ஹைதராபாத் அணியில் இருக்கும் அபிஷேக் சர்மா தற்போது பஞ்சாப் அணிக்கு மாற்றப்பட உள்ளார். இதற்கான டிரேடிங் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது.

ஏன்

ஏன்

சர்ப்ரஸ் கான் வேண்டும் என்று ஹைதராபாத் அணி பேரம் பேசியதால் இந்த மாற்றம் நடக்க உள்ளது என்று கூறுகிறார்கள். இது ஏலத்திற்கு பின்பான டிரேடிங்கிற்கு தொடக்கமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹைதராபாத் அணிகளை தொடர்ந்து மற்ற அணிகளும் இதேபோல் டிரேடிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

முக்கியமாக டெல்லி, ராஜஸ்தான் அணிகள் டிரேடிங்கில் குதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சில முக்கியமான வீரர்கள் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது. இனி வரும் நாட்களில் டிரேடிங் குறித்த செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, February 22, 2021, 9:54 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+