
சென்னை
நேற்று ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில் ரெய்னா பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் கேப்டன் தோனிக்கு ஒரு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார் என்று கூறுகிறார்கள். ரெய்னா இப்போது நல்ல பார்மில் இல்லை.

எப்படி
நடந்து முடித்த சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் ரெய்னா சரியாக ஆடவில்லை. அதற்கு முன் நடந்த கிரிக்கெட் தொடர் எதிலும் இவர் ஆடவில்லை. இரண்டு வருடமாக பெரிய அளவில் கிரிக்கெட் ஆடவில்லை. இதன் காரணமாகவே ரெய்னாவை சிஎஸ்கே எடுக்கும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள்

ரெய்னா
இந்த நிலையில்தான் ரெய்னா சொதப்பினால் மாற்றாக இருக்கும் என்று உத்தப்பாவை சிஎஸ்கே எடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் மொயின் அலியும் எடுக்கப்பட்டார். உத்தப்பா மற்றும் அலி பாய் வருகை சிஎஸ்கே அணியில் ரெய்னாவின் இருப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

பார்ம் அவுட்
ரெய்னா பார்மில் இல்லாதபட்சத்தில் அலியை ஓப்பனிங் இறங்க வைத்துவிட்டு டு பி பிளஸிஸை ஒன் டவுன் இறங்க வைக்க வாய்ப்புள்ளது. இதனால் சிஎஸ்கே அணியில் ரெய்னாவின் இருப்பு ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது. இதனால்தான் தற்போது ரெய்னா பயிற்சி செய்ய தொடங்கி இருக்கிறார்.

பயிற்சி
இத்தனை நாளாக பயிற்சி செய்யாதவர் நேற்று மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். அதிலும் தோனியுடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தோனிக்கு ரெய்னா சமாதான தூதும் அனுப்பி இருக்கிறார். தோனியின் ஜெர்சியை அணிந்து இவர் பயிற்சி செய்து வருகிறார்.

ஜெர்சி
7ம் நம்பர் போட்ட தோனியின் ஜெர்சியை அணிந்து இவர் பயிற்சி செய்து வருகிறார். தோனியுடன் சமாதானம் ஆவது போல இவர் இந்த ஜெர்சியை அணிந்து இருக்கிறார். அணிக்குள் தன்னுடைய இடத்தை உறுதி செய்வதற்காக இவர் இப்படி செய்கிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











