Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நடந்தாலும் சரி.. அவரை எடுக்க வேண்டாம்.. ஆர்சிபி அணிக்கு கோலி கொடுத்த வார்னிங்.. என்னாச்சு?

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரர் ஒருவரை எடுக்க வேண்டாம் என்ற முடிவில் கோலி இருப்பதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடர் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடப்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று சென்னையில் மதியம் 3 மணிக்கு நடக்கிறது. மொத்தம் 291 வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரர் ஒருவரை எடுக்க வேண்டாம் என்ற முடிவில் கோலி இருப்பதாக கூறப்படுகிறது.2021 ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் பெங்களூர் அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர். அதிக வீரர்களை நீக்கிய அணிகளில் ஒன்றாக பெங்களூர் அணி உள்ளது.

நீக்கம்

நீக்கம்

கடந்த சீசனில் பெங்களூர் அணி நினைத்ததை விட சிறப்பாக ஆடியது. இதனால் அந்த அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூர் அணியில் இருந்து 9 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஆரோன் பின்ச், உமேஷ் யாதவ், மெயின் அலி , சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், டெல் ஸ்டெயின், உடானா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

யார்

யார்

வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உமேஷ் மற்றும் மோரிஸுக்கு பதிலாக பெங்களூர் அணி இரண்டு பவுலர்களை எடுக்க வேண்டும். இதில் பெங்களூர் அணி முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு குறி வைக்கும் என்று கருதப்பட்டது . இவர் பெங்களூர் அணிக்கு நல்ல பவுலிங் ஆப்ஷனாக இருப்பார் .

 வெளிநாட்டு வீரர்

வெளிநாட்டு வீரர்

அவ்வப்போது கீப்பிங்கும் செய்வார். அதேபோல் பெங்களூர் அணியில் கிறிஸ் மோரிஸ் அல்லது ஸ்டெயின் இடத்தை முஸ்தபிசுர் நிரப்ப அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இவரை அணியில் எடுக்க வேண்டாம் என்று கோலி கூறியுள்ளார். இந்த சீசனில் வங்கதேச வீரர்கள் ஆட முடியாத நிலை உள்ளது.

நிலை என்ன

நிலை என்ன

வங்கதேச அணி நிறைய கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால், அந்த அணியின் வீரர்கள் இந்த தொடரில் சில போட்டிகள் மட்டுமே ஆட வாய்ப்புள்ளது. ஆனால் அதுவும் கூட சந்தேகம்தான். இதனால் இவரை அணியில் எடுத்தால் சிக்கலாகும் என்று கோலி நினைக்கிறார்.

வேண்டாம்

வேண்டாம்

வெளிநாட்டு வீரரில் அவரை மட்டும் எடுக்க வேண்டாம். மும்பை அணி ரிலீஸ் செய்த மெக்லாந்தன் என்ற வீரரை அணியில் எடுங்கள். ஸ்டெயினுக்கு நல்ல மாற்றாக இருப்பார் என்று கோலி கூறியுள்ளார். இதனால் முஸ்தபிசுர் ரஹ்மான் பெங்களூர் அணிக்கு வர வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

Story first published: Thursday, February 18, 2021, 12:53 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+