Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்பா இது ரொம்ப பெரிய ரிஸ்கால இருக்கு.. ஐபிஎல்லில் நடக்காத விஷயம்.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு!

சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளது. இது மட்டும் கைகொடுத்தால் ஐபிஎல் தொடரில் அது பெரிய திருப்பமாக இருக்கும்.

2021 ஐபிஎல் ஏலம் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் அதற்கு ஏற்றபடி வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த தொடர் நடப்பதால் அதற்கு ஏற்றபடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று மொத்தம் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

பெங்களூர்

பெங்களூர்

2021 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி ஓப்பனிங் வீரர்கள் யாரையும் எடுக்கவில்லை. அணியில் ஏற்கனவே இருந்த ஓப்பனிங் வீரர் ஆரோன் பின்ச் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டார். தற்போது ஜோஷ் பிளிப், மட்டுமே வெளிநாட்டு ஓப்பனராக இருக்கிறார்

 ஆடும் அணி

ஆடும் அணி

ஆனால் இவரும் ஆடும் அணியில் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஏற்கனவே கைலி ஜெமிசன், மேக்ஸ்வெல், ஏபிடி, டேனியல் கிறிஸ்டின், ஆகியோர் ஆடுவதால் ஜோஸ் பிளிப்பிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஜோஷ் பிளிப்பும் இந்தியாவில் பெரிய அளவில் ஆடுவாரா என்று தெரியவில்லை.

 இரண்டு வீரர்கள்

இரண்டு வீரர்கள்

இதனால் இரண்டு இளம் வீரர்களை பெங்களூர் அணி ஓப்பனிங் வீரர்களாக இறக்கும் என்கிறார்கள். அதன்படி ஏற்கனவே அதிரடி ஓப்பனிங் வீரர் படிக்கல் அணியில் இருக்கிறார். தற்போது அசாருதீன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். சையது முஷ்டாக் தொடரில் கேரளா அணியில் இவர் ஆடினார்.

வெறும் 37 பந்து

வெறும் 37 பந்து

அங்கு வெறும் 37 பந்தில் இவர் செஞ்சுரி அடித்தார். இவர் மிகவும் அதிரடியான ஓப்பனிங் வீரர். படிக்கலை அணிக்குள் கொண்டு வந்து பெங்களூர் அணி ஷாக் கொடுத்தது போல அசாருதீனையும் அணிக்குள் கொண்டு வந்து கோலி ஷாக் கொடுப்பார் என்கிறார்கள். இரண்டு இளம் வீரர்களும் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இப்படி இரண்டு இளம் வீரர்கள், அதுவும் கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் ஓப்பனிங் இறங்கியது இல்லை. கோலி இவர்கள் இருவரையும் ஓப்பனிங் இறக்கினால் அது பெரிய ரிஸ்க்காக இருக்கும். ஆனால் கோலி இப்படி ஒரு ரிஸ்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த ஐபிஎல் 2021 தொடரில் இதனால் பெங்களூர் அணி கவனத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது .

Story first published: Friday, February 19, 2021, 12:57 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+