Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ. 30 கோடி காலி.. கோலி பார்த்து பார்த்து எடுத்த வீரர்களுக்கு இப்படி ஒரு நிலையா? ஷாக்கிங் பின்னணி!

சென்னை: ஐபிஎல் 2021 ஏலத்தில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டு இருக்கும் வீரர்கள் யாரும் தற்போது சரியான பார்மில் இல்லை. இன்று நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான டி 20 போட்டியில் இவர்கள் மோசமாக சொதப்பி உள்ளனர்.

2021 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி சிறப்பான வீரர்களை குறி வைத்து ஏலம் எடுத்து இருக்கிறது. எவ்வளவு செலவானாலும் அந்த அணி சில முக்கிய வீரர்களை கொக்கி போட்டு தூக்கி உள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் ஒருவழியாக நேற்று நடந்தது. ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் அதற்கு ஏற்றபடி வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்

பெங்களூர்

பெங்களூர்

இந்த நிலையில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டு இருக்கும் வீரர்கள் யாரும் தற்போது சரியான பார்மில் இல்லை. இன்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்த டி 20 போட்டியில் ஆர்சிபி வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. இரண்டு அணியில் உள்ள ஆர்சிபி வீரர்கள் சொதப்பி உள்ளனர்.

ஆர்சிபி

ஆர்சிபி

ஆர்சிபி ஆனால் 14.25 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் வெறும் 1 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்சிபி வீரர் ஜோஸ் பிளிப் வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.அதேபோல் பெங்களூர் அணியில் ஆடும் இன்னொரு ஆஸி வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

15 கோடி

15 கோடி

அதேபோல் ஆர்சிபி அணியால் 15 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கைலி ஜெமிசன் 3 ஓவர் வீசி 32 ரன்கள் கொடுத்து வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இன்று நியூசிலாந்து அணியில் இவர் மட்டுமே மோசமாக வீசினார்

 பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் அணியை ஆஸ்திரேலியா வீரர்கள் இன்று பவுலிங்கிலும் மோசமாக செயல்பட்டனர். கேன் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல், சாம்பா என்ற மூன்று ஆர்சிபி வீரர்களும் மோசமாக பவுலிங் செய்தனர். இதனால் ஆஸ்திரேலியா இன்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியிடம் மோசமாக தோல்வி அடைந்தது.

பேட்டிங்

பேட்டிங்

இன்றுக்கு முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 17.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 131 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக ஆடிய டேவன் கான்வாய் 99 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

Story first published: Monday, February 22, 2021, 16:01 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+