இதுக்குத்தான் என்னை சிஎஸ்கேவில் எடுத்தது.. சொல் அல்ல..செயல் மூலம் நிரூபித்த உத்தப்பா.. பரபர சம்பவம்
சென்னை: சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டு இருக்கும் மூத்த வீரர் உத்தப்பா தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் நன்றாக ஆடி வருகிறார்.
2021 ஐபிஎல் தொடருக்கு 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை ஒவ்வொரு அணியும் உருவாக்கி உள்ளது.
ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே எடுத்து உள்ளது.

ஏலம்
ஏலத்திற்கு முன்பாகவே ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்து வாங்கியுள்ளது.கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இருந்தாலும் இவரை சிஎஸ்கே எடுத்துள்ளது.

நியாயம்
ராஜஸ்தான் அணியில் இவர் 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அதே தொகையை கொடுத்து சிஎஸ்கே இவரை வாங்கி உள்ளது. இவரை அணியில் எடுத்தது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் தன்னை அணியில் எடுத்தது நியாயம்தான் என்று உத்தப்பா தற்போது நிரூபித்துள்ளார்.

எப்படி
சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டு இருக்கும் மூத்த வீரர் உத்தப்பா தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் நன்றாக ஆடி வருகிறார். இன்று ஒடிசாவிற்கு எதிராக கேரளா ஆடி வரும் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் அதிரடியாக ஆடி சதம் அடித்து இருக்கிறார் உத்தப்பா.

அதிரடி ஆட்டம்
85 பந்தில் 107 ரன்கள் எடுத்த இவர் 4 சிக்ஸ், 10 பவுண்டரி என்று நிரூபித்துள்ளார். இவர் பார்மில் இல்லை. சரியாக ஆடுவது இல்லை என்று கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் அனைத்து விமர்சனத்திற்கும் தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய பிட்ச்
இந்திய பிட்சில் நான் நன்றாக ஆடுவேன் என்று நிரூபித்துள்ளார். அதிலும் ஐபிஎல் தொடருக்கு முன் இவர் சிறப்பாக ஆடியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்கள் சொதப்பும் நிலையில் இவர் சிஎஸ்கேவிற்கு ஓப்பனிங் இறங்க வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications