Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 மணி நேரம்.. வெளியே வரவே இல்லை.. ஐபிஎல்லுக்கு முன் ரோஹித் செய்த காரியம்.. ஏதோ திட்டம் இருக்கு?!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மும்பை அணியின் ரோஹித் சர்மா முக்கியமான திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது. மினி ஏலமாக இது சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த ஏலம் இன்று மதியம் 3 மணிக்கு நடக்க உள்ளது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னைக்கு வந்துள்ளனர்.

எப்படி

எப்படி

அணி நிர்வாகிகள் இப்படி சென்னை வந்துள்ள நிலையில் இவர்கள் இந்திய வீரர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் தற்போது இந்திய வீரர்கள் கோலி, ரோஹித், ராகுல் ஆகியோர் கேப்டன்களாக இருக்கிறார்கள்.இதனால் இவர்களை சந்திக்க அணி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

இல்லை

இல்லை

ஆனால் கொரோனா பயோ பபுள் காரணமாக இவர்களை சந்திக்க அணி நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்கள் தங்கள் அணி நிர்வாகிகளிடம் வீடியோ காலில் பேசலாம். ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் என்று பிசிசிஐ குறிப்பிட்டு இருந்தது.

ரோஹித்

ரோஹித்

இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று மும்பை அணி நிர்வாகிகளுடம் மீட்டிங்கில் கலந்து கொண்டார். ஜூம் மீட்டிங்கில் இவர் கலந்து கொண்டு ஆலோசனைகளை செய்தார். கோலியும் இதேபோல் ஆலோசனை செய்தார்.

ஆலோசனை

ஆலோசனை

கோலி, ராகுல் ஆகியோர் தங்கள் அணிகளில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நிலையிலும் கூட இவர்கள் 1 மணி நேரம் மட்டும் ஆலோசனை செய்துள்ளனர். சீக்கிரமே இவர்கள் மீட்டிங்கை முடித்துள்ளனர். ஆனால் ரோஹித் சர்மா நேற்று நேரம் மீட்டிங்கில் பேசி உள்ளார்.

பேசினார்

பேசினார்

அதன்படி 3 மணி நேரம் இவர் மீட்டிங்கில் கலந்து கொண்டு ஆலோசனை செய்துள்ளார். அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே உடன் இவர் ஆலோசனை செய்துள்ளார். 3 மணி நேரம் ஒரே அறையை விட்டு வெளியே வரமால் ரோஹித் சர்மா ஜூம் மீட்டிங்கில் பேசி இருக்கிறார்.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

மும்பை அணி இந்த முறை சில வெளிநாட்டு பவுலர்கள் மற்றும் சில உள்நாட்டு ஸ்பின் பவுலர்களை எடுக்கும். இதனால் அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக ரோஹித் சர்மா ஆலோசனை நடத்தி இருப்பார் என்கிறார்கள்.

Story first published: Thursday, February 18, 2021, 9:21 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+