Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை கிடையாது.. இருக்குறதுலயே இந்த டீம்தான் பெஸ்ட்..அதிர வைக்கும் பிளேயிங் 11.. ஏலத்தால் டிவிஸ்ட்

சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்திற்கு பின் 8 அணிகளில் முக்கியமான அணி ஒன்று புதிய பலம் பெற்று இருக்கிறது. மிகவும் வலிமையான அணியாக ஒரு அணி உருவெடுத்து உள்ளது.

நேற்று சென்னையில் 2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்தது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னை வந்து இருந்தனர்.

சென்னையில் 5 மணி நேரம் நடந்த இந்த விறுவிறுப்பான ஏலத்தில் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். பெங்களூர் அணி இந்த முறை சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

ஏலம்

ஏலம்

இந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன் பெங்களூர் அணியில் நல்ல பவுலர்கள் இல்லை. அணியில் இருந்த உடானா போன்ற பவுலர்களையும் கோலி வெளியேற்றிவிட்டார். அதேபோல் பெரிய அளவில் மிடில் ஆர்டரில் ஆடவும் , பினிஷிங் செய்யவும் ஆட்கள் இல்லை. நல்ல வெளிநாட்டு பவுலரும் இல்லை.

எப்படி

எப்படி

ஆனால் இந்த ஏலம் மூலம் பெங்களூர் அணி அனைத்தையும் சரி செய்து இருக்கிறது. அதன்படி வலிமையான ஸ்பீட் பவுலர் கைலி ஜெமிஷனை பெங்களூர் அணி எடுத்துள்ளது . 26 வயது நிரம்பிய இந்த நியூசிலாந்து வீரருக்கு 15 கோடி ரூபாயை பெங்களூர் அணி கொடுத்துள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

அதேபோல் ஏபிடிக்கு பின் பேட்டிங் செய்ய சிவம் துபே போன்ற ஆட்கள் இருந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்துள்ளது. இதனால் கோலி அல்லது ஜோஸ் பிளிப் ஓப்பனிங் இறங்குவார்கள் என்று கருதப்படுகிறது.

தேர்வு

தேர்வு

கூடுதலாக அதிரடி ஆல் ரவுண்டர் டேன் கிறிஸ்டினை பெங்களூர் அணி 4.80 கோடிக்கு எடுத்துள்ளது. இவரையும் அவ்வப்போது பேட்டிங்கில் டாப் ஆர்டரில் இறக்க வாய்ப்புள்ளது. இதனால் பெங்களூர் அணி இந்த முறை அதிசயமாக பேட்டிங், பவுலிங் என்று அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது.

மும்பை

மும்பை

மும்பை அணிக்கு இணையான வலிமை, வீரர்களை கொண்ட அணியாக பெங்களூர் அணி மாறி உள்ளது. பெங்களூர் அணியில் தற்போது கோலி, ஏபிடி, படிக்கல், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல். சபாஷ் அகமது, பவான் தேஷ்பாண்டே, சாஹல், வாஷிங்க்டன் சுந்தஹார், சிராஜ், எஸ். பாராட், டேனியல் கிறிஸ்டின், கைலி ஜெமிசன், முகமது அசாருதீன், மேக்ஸ்வெல் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

Story first published: Friday, February 19, 2021, 12:57 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+