Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான்தான் ஓப்பனர்.. முடிஞ்சதை பாருங்க.. வெறும் 2 நாளில் சொல்லிக்காட்டிய சிஎஸ்கே வீரர்.. தெறி ஆட்டம்!

சென்னை: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிஎஸ்கே வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி புதிய வீரர்கள் 6 பேரை எடுத்து புதிய பொலிவு பெற்றுள்ளது. ஆப் ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது .

விஜய் ஹசாரே

விஜய் ஹசாரே

தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். சிஎஸ்கேவில் இருக்கும் இளம் வீரர்கள் நடந்து கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தங்கள் திறமைகளை நிரூபிக்க தொடங்கி உள்ளனர். ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் பெரிய அளவில் இவர்கள் நம்பிக்கை அளித்து வருகிறார்கள்.

 சிஎஸ்கே வீரர்

சிஎஸ்கே வீரர்

நேற்று சிஎஸ்கே வீரர்கள் ஜெகதீசன், உத்தப்பா, சாய் கிஷோர், ஹரி சங்கர் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். இதில் உத்தப்பா, ஜெகதீசன் இரண்டு பேருமே சதம் அடித்து அசத்தினார்கள். இந்த நிலையில் இன்று சிஎஸ்கே வீரர் ரூத்துராஜ் அதிரடியாக ஆடி வருகிறார்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக இருக்கும் ரூத்துராஜ் இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி சதம் அடித்துள்ளார். 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடக்கம். ஒருநாள் போட்டிகளிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

வெற்றி

வெற்றி

சிஎஸ்கே அணியில் இந்த வருடம் ரூத்துராஜை ஓப்பனிங் இறக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. இவருக்கு இந்த வருடமாக வாய்ப்பு கொடுக்க வேண்டுமா, அல்லது உத்தப்பாவையும், டு பிளாசிஸையும் ஓப்பனிங் இறக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரூத்துராஜ் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பார்ம்

பார்ம்

நான் இப்போதும் நல்ல பார்மில் இருக்கிறேன். தொடர்ந்து அதிரடியாக ஆடுவேன் என்று ரூத்துராஜ் தனது பேட்டிங் மூலம் நிரூபித்துள்ளார். ஏலம் முடிந்து இரண்டு நாளில் ரூத்துராஜ் இப்படி அதிரடியாக ஆடியுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியில் இந்த வருடமும் ரூத்துராஜ்தான் ஓப்பனிங் வீரராக இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Sunday, February 21, 2021, 12:53 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+