Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்மித்தை எடுக்க சண்டை போட்ட 2 அணிகள்.. யாருமே எதிர்பார்க்காத பரபர முடிவு.. டெல்லி கொடுத்த டிவிஸ்ட்!

சென்னை: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி ரூபாய் 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

14வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.2021 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.

ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருந்தது. ஏப்ரல் 10ம் தேதி பெரும்பாலும் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் இன்று ஏலம் தொடங்கியதில் இருந்தே பெரிய அளவில் எந்த வீரர்கள் மீதும் அணிகள் தொடக்கத்தில் ஆர்வம் செலுத்தவில்லை. இந்திய வீரர் கருண் நாயர், அலெக்ஸ் ஹெல்ஸ் போன்ற வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை.

ஸ்மித்

ஸ்மித்

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்மித் ஏலம் விடப்பட்டார். இவர் 2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். இவரை முதலில் பெங்களூர் அணி 2 கோடிக்கு கேட்டது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் அணி இவரை கேட்ட சில நிமிடத்தில் டெல்லி அணியும் ஏலம் கேட்டது. டெல்லி அணி இவரை 2.20 கோடிக்கு ஏலம் கேட்டது. ஆனால் அதன்பின் வேறு எந்த அணியும் இவர் மீது ஆர்வம் செலுத்தவில்லை.

டெல்லி அணி

டெல்லி அணி

இதையடுத்து டெல்லி அணி ஸ்மித்தை ரூபாய் 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த வருடம் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் இருந்தார். இந்த நிலையில் தற்போது ஸ்மித் டெல்லி அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.

Story first published: Thursday, February 18, 2021, 15:34 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+