Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பொய்யான காரணத்தை சொல்லிவிட்டு.. ஓடிவிடுவார்".. வெளியான மூத்த வீரரின் பகீர் பிளான்.. ஐஎல்லில் பரபர

ஜெய்ப்பூர்: ஐபிஎல் சமயத்தில் ஸ்மித் ஏதாவது பொய்யான காரணத்தை சொல்லிவிட்டு, போட்டியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பார்.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் அணிகள் எல்லாம் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த தொடர் நடக்க உள்ளது.

இந்த முறை இந்தியாவில் மட்டுமே போட்டிகள் நடக்கும். கொரோனாவை காரணம் காட்டி சில மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும்.

எப்படி

எப்படி

இந்தநிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ஸ்மித் ராஜஸ்தான் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு பதிலாக தற்போது டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே இவர் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.

ஸ்மித்

ஸ்மித்

இந்த நிலையில் ஐபிஎல் சமயத்தில் ஸ்மித் ஏதாவது பொய்யான காரணத்தை சொல்லிவிட்டு, போட்டியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார். அதில், ஸ்மித் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்தான்.

காரணம்

காரணம்

அவரை குறைந்த விலைக்கு எடுத்துள்ளனர். 2.2 கோடி ரூபாய் என்பது அதிக தொகை கிடையாது. அதனால் அவர் இந்தியா வந்த பயோ பபுளில் இருப்பதை விரும்ப மாட்டார். இதற்கு பதிலாக அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பார்/

விமர்சனம்

விமர்சனம்

காயம் இருக்கிறது என்று கூறிவிட்டு அவர் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வார். 2.2 கோடி ரூபாய் அவருக்கு பெரிய தொகை கிடையாது என்று மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். குறைந்து தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை ஸ்மித் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

Story first published: Sunday, February 21, 2021, 8:19 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+