Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்மார்ட் பிளான்.. இப்படி ஒரு ஸ்பின் படையை பார்த்ததில்லை.. 7 அணிகளுக்கு தரப்பட்ட அதிர்ச்சி வைத்தியம்

சென்னை: ஐபிஎல் தொடரில் எப்போதும் பவுலிங் மீது கவனம் செலுத்தும் முக்கியமான அணி ஒன்று இந்த முறை தங்கள் பவுலிங் படையை இன்னும் வலிமையாக்கி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. 292 வீரர்கள் இந்த ஏலத்தில் நேற்று ஏலம் விடப்பட்டனர்.

பஞ்சாப் அணி இந்த ஏலம் மூலம் பல புதிய வீரர்களை எடுத்துள்ளது. சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் பொதுவாக ஹைதராபாத் அணி என்றால் பவுலிங் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். தொடக்கத்தில் இருந்தே ஹைதராபாத் அணி பவுலிங் மீது கவனம் செலுத்தும். ஸ்பீட் பவுலர்கள், ஸ்பின் பவுலர்கள் என்று அந்த அணியிடம் மிகவும் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.

பவுலர்கள்

பவுலர்கள்

புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் சர்மா, கலீல் அஹமத், மிட்சல் மார்ஷ் என்று சிறப்பான ஸ்பீட் பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர். அதேபோல் ஸ்பின் பவுலர்களும் இருக்கிறார்கள். இப்போது ஹைதராபாத் அணி தங்கள் ஸ்பின் பலத்தை இன்னும் அதிகரித்து இருக்கிறது.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

அதன்படி ரஷீத் கான், முகமது நபி ஏற்கனவே அணியில் உள்ள நிலையில் முஜீப் உர் ரஹ்மான் அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் டாப் பவுலர்கள் மொத்தமாக ஹைதராபாத் அணிக்கு சென்றுள்ளனர். அதிலும் வெறும் 1.5 கோடி ரூபாய்க்கு முஜீப் உர் ரஹ்மான் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

 பிளான் என்ன

பிளான் என்ன

மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்டாக பிளான் போட்டு இவரை ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல்லில் எந்த அணியிடமும் இவ்வளவு வலிமையான ஸ்பின் படை இல்லை. இந்த முறை ஸ்பின் பிட்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் இந்த தொடர் நடப்பதால் ஹைதராபாத் அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள்.

Story first published: Friday, February 19, 2021, 13:37 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+