292 வீரர்கள்.. 8 அணிகள்.. தொடங்கியது ஐபிஎல் 2021 ஏலம்.. தமிழக வீரர்களுக்கு ஸ்கெட்ச்.. முழு பின்னணி!
சென்னை: 14வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.
2021 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருந்தது.
ஏப்ரல் 10ம் தேதி பெரும்பாலும் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்றபடி ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஏலம்
ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல் முக்கியமான வீரர்களை ஒவ்வொரு அணியும் ரீடெயின் செய்துள்ளது. ஏலத்திற்காக வீரர்கள் பெயர் பதிவு செய்யும் காலவரை கடந்த 4ம் தேதியோடு முடிந்துவிட்டது.

எத்தனை
1097க்கும் வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. இதில் 164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர். இதில் மார்க் வுட் ஏலத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது முஸ்தபிகர் ரஹீம் ஏலத்தில் இணைந்துள்ளது.

சென்னை
சென்னையில் இந்த ஏலம் தொடங்கி உள்ளது. டேவிட் மாலன், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. தமிழக வீரர் ஷாருக்கான், கேரள வீரர் அசாருதீன் ஆகியோர் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. தமிழக வீரர்கள் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

தமிழக வீரர்கள்
இந்த ஏலத்தில் தமிழக வீரர்கள் மீது குறி வைக்கப்பட வாய்ப்புள்ளது. ஷாருக்கான், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், சித்தார்த் மணிமாறன், பாபா அபராஜித் போன்ற வீரர்கள் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஏலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications