கோயம்புத்தூர் பையன்.. தோனியை கவர்ந்த அந்த ஆட்டம்.. தமிழக ஓப்பனரை வளைத்த சிஎஸ்கே.. டிவிஸ்ட்!
சென்னை: சிஎஸ்கே அணியில் தற்போது தமிழக வீரர் ஹரி நிஷாந்த் ஏலம் எடுக்கப்பட்டார்.
2021 ஐபிஎல் ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடைசியில் சில வீரர்கள் ஏலம் விடுக்கப்பட்டு வருகிறார்கள்.
சிஎஸ்கே அணி இந்த முறை கொஞ்சம் கலவையான வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது. தொடக்கத்தில் மூத்த வீரர்களை எடுத்த நிலையில் இளம் வீரர்களை இப்போது குறி வைத்து வருகிறது.

சிஎஸ்கே
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தற்போது தமிழக வீரர் ஹரி நிஷாந்த் ஏலம் எடுக்கப்பட்டார். 20 லட்சம் ரூபாய்க்கு ஹரி நிஷாந்த் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக அணியில் ஓப்பனிங் இறங்கிய வீரர் ஹரி நிஷாந்த்.

தமிழக அணி
இவர் தமிழக அணியில் மிகவும் சிறப்பாக ஆடினார். தமிழக அணியில் சையது முஷ்டாக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல தொடக்கம் கொடுத்தார். இந்த தொடர் மட்டுமின்றி இதற்கு முன்பும் இவர் நன்றாகவே ஆடி இருக்கிறார்.

கோயம்புத்தூர்
இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக வீரர் ஹரி நிஷாந்த் ஏற்கனவே சிஎஸ்கேவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஹரி நிஷாந்துக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.

டிஎன்பிஎல்
இவர் டிஎன்பிஎல் போட்டியிலும் நன்றாக ஆடினார். இதில் இவரின் போட்டிகளை தோனி பார்த்து இருக்கிறார். இதை பார்த்து தோனி இவரை அணியில் எடுக்க விருப்பப்பட்டு உள்ளார்.

ஹரி நிஷாந்த்
பெரும்பாலும் ஹரி நிஷாந்த் மாற்று ஓப்பனிங் வீரராக களமிறங்குவார். தமிழக வீரர்களை சிஎஸ்கே அணி குறி வைக்கவில்லை என்று புகார் இருந்தது. தற்போது அந்த குறையை ஹரி நிஷாந்த் தேர்வு பூர்த்தி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications