Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை விட கூடாது.. தமிழக வீரரை எடுக்க நடந்த கடும் மோதல்.. ரூ 5.25 கோடிக்கு சுருட்டிய பிரீத்தி ஜிந்தா

சென்னை: கடும் போட்டிக்கு பின் தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

2021 ஐபிஎல் சென்னையில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஸ்மித் இதில் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

அதன்பின் பெரிய அளவில் வீரர்கள் யாரும் ஏலம் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பல்வேறு அணிகளும் கடுமையாக முயன்று கடைசியில் பெங்களூர் எடுத்தது..

எப்படி

எப்படி

தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க பல அணிகள் ஆர்வம் காட்டியது. ஷாருக்கானை எடுக்க டெல்லி, பெங்களூர் அணிகள் ஆர்வம் காட்டியது. முக்கியமாக பெங்களூர் அணி தொடக்கத்தில் இருந்து இவரை கேட்டது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடிய ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி இவர் வெற்றி தேடி தந்துள்ளார். இவர் சிறப்பம்சமே சஞ்சு சாம்சன் போல முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டுவதுதான். அதேபோல் இவர் நல்ல பினிஷர்.

பினிஷர்

பினிஷர்

கடைசி வரை அதிரடியாக ஆடி மேட்சை பினிஷ் செய்வது இவரின் சிறப்பம்சமாக இருக்கிறது. அதிலும் நாக் அவுட் போட்டிகளில் தமிழக அணிக்காகக் ஷாருக்கான் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. இதனால் ஐபிஎல் அணிகள் இவரை பெரிய அளவில் குறி வைத்தது.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்த நிலையில் கடும் போட்டிக்கு பின் தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தமிழக வீரரை ஏலம் எடுத்துவிட்டு பிரீத்தி ஜிந்தா உற்சாகம் அடைந்தார். இவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Thursday, February 18, 2021, 17:37 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+