Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த நொடி.. தமிழக வீரரால் குலுங்கிய பேருந்து.. ஏலத்தை அதிர வைத்த சம்பவம்.. டிகே வெளியிட்ட வீடியோ!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஒருவர் எதிர்பாராமல் அதிக தொகைக்கு ஏலம் சென்றது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

2021 ஐபிஎல் ஏலம் நேற்று நடந்தது. மினி ஏலம் என்றாலும் பல மூத்த வீரர்கள் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கான் எதிர்பாராமல் மிக அதிக தொகைக்கு ஏலம் சென்றார்.

இவர் சையது முஷ்டாக் போட்டியில் நன்றாக ஆடியதால் அதிக தொகைக்கு ஏலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நேற்று ஷாருக்கானை ஏலம் எடுக்க பல அணிகள் ஆர்வம் காட்டியது. ஷாருக்கானை எடுக்க டெல்லி, பெங்களூர் அணிகள் ஆர்வம் காட்டியது. முக்கியமாக பெங்களூர் அணி தொடக்கத்தில் இருந்து இவரை கேட்டது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடிய ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார்.

 கடும் போட்டி

கடும் போட்டி

கடும் போட்டிக்கு பின் தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ஏலம் எடுக்க பெங்களூர் அணி தீவிரமாக முயன்றது. கொல்கத்தா அணியும் இவரையும் எடுக்க தீவிரமாக முயன்றது. தமிழக வீரரை ஏலம் எடுத்துவிட்டு பிரீத்தி ஜிந்தா உற்சாகம் அடைந்தார்.

எப்படி

இந்த நிலையில் ஷாருக்கானை நேற்று ஏலம் எடுத்த போது தமிழக வீரர்கள் எல்லோரும் பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பயிற்சி முடித்துவிட்டு பேருந்தில் இவர்கள் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த ஏலம் நடந்துள்ளது.

ஏலம்

ஏலம்

பாய் பாய் நாலு கோடியை தாண்டிடுச்சு என்று இவர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். இதில் ஒவ்வொரு கோடி உயரும் போதும் தமிழக வீரர்கள் ஷாருக்கானுக்கு உற்சாகம் கொடுத்தனர். உற்சாகத்தில் இவர்கள் கத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

வீடியோ

வீடியோ

இவர்கள் கத்த கத்த பேருந்து குலுங்குவதும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தினேஷ் கார்த்திக் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார். இவர் ஏலம் எடுக்கப்பட்ட இந்த நொடி தமிழக வீரர்கள் எல்லோரும் கரகோஷம் எழுப்பி ஷாருக்கானை பாராட்டினார்கள்.

Story first published: Friday, February 19, 2021, 12:17 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+