"ஸ்மார்ட் பையிங்".. ஐபிஎல் அணிகளை அதிர வைத்த 4 வீரர்களின் ஏலங்கள்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா?
சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் நான்கு வீரர்கள் எடுக்கப்பட்ட விதம் மொத்த ஏலத்திலும் பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
2021 ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. மூத்த வீரர்கள் பலர் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.
ஸ்மார்ட் பையிங் என்று சொல்லும் அளவிற்கு குறைந்த விலையில் மூத்த வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

டேவிட் மாலன்
இந்த ஏலத்தில் டேவிட் மாலன் எடுக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் உலகின் நம்பர் டி 20 பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் இவரை யாரும் குறி வைக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் அணி இவரை வெறும் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

ஸ்மித்
இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி ரூபாய் 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவரை பல கோடிகள் எல்லாம் கொடுத்து வாங்காமல் டெல்லி அணி குறைந்த தொகைக்கு வாங்கி உள்ளது. டெல்லி அணியில் மூத்த வீரர்கள் இல்லாத குறையை இவர் போக்க வாய்ப்புள்ளது.

ஆடம்
இது போக இன்னொரு பக்கம் ஆடம் மில்னே மும்பை அணி மூலம் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் பிபிஎல் தொடரில் இவர் கலக்கியவர் . சிறப்பான பவுலர். இவரை வெறும் 3.2 கோடி ரூபாய்க்கு மும்பை அணி எடுத்துள்ளது.

ரிச்சர்ட்சன்
இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி மூலம் ஜய் ரிச்சர்ட்சன் ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை அதிக விலைக்கு எடுத்தாலும் இவர் சிறப்பான ஆஸ்திரேலிய பவுலர். பிபிஎல் தொடரில் இவர் நன்றாக ஆடும் நிலையில் தற்போது பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications