அந்த ஏமாற்றம்தான் காரணம்.. 2 "மூத்த" வீரர்களை எடுத்த சிஎஸ்கே.. பிளமிங் கொடுத்த கடுமையான அழுத்தம்!
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக முக்கியமான அழுத்தம் ஒன்றில் இருந்திருக்கிறது. இது அணி தேர்விலும் எதிரொலித்துள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடந்து வருகிறது. முதல் பாதி ஏலம் முடிந்துள்ள நிலையில் ஹைதராபாத் அணியை தவிர மற்ற அணிகள் வீரர்களை எடுத்துள்ளது.
இதில் சிஎஸ்கே அணி 3 வீரர்களை எடுத்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியிடம் பெரிய அளவில் பணம் கையில் இல்லை.

சிஎஸ்கே
கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக முக்கியமான அழுத்தம் ஒன்றில் இருந்திருக்கிறது. இது அணி தேர்விலும் எதிரொலித்துள்ளது. சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலர்கள் இல்லாமல் இருந்தனர்.

அழுத்தம்
முக்கியமாக ஆப் ஸ்பின் பவுலர்கள் அணியில் இல்லை . ஹர்பஜன், பியூஸ் சாவ்லா இரண்டு பேருமே அணியில் இருந்து நீக்கப்பட்டள்ளனர். இதனால் ஸ்பின் பவுலர்களை இறக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

கட்டாயம்
கடந்த சீசனில் சிஎஸ்கே ஸ்பின் பவுலர்கள் சரியாக ஆடவில்லை. ஆப் ஸ்பின்னர்கள் யாரும் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் சிஎஸ்கே அணி பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தது. இதை சரி செய்ய தற்போது சிஎஸ்கே அணி ஸ்பின் பவுலர்களை கூறி வைத்துள்ளது.

கோரிக்கை
இந்த ஏலத்திற்கு முன்பே ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என்று பயிற்சியாளர் பிளமிங் கூறினார். இவர் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது கவுதம், மொயின் அலி ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications