Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"திறமை எல்லாம் முக்கியமில்லை".. தோனி இருக்கும் வரை.. அதுமட்டும் நடக்காது.. பரிதாப நிலையில் சிஎஸ்கே

சென்னை: சிஎஸ்கே அணியில் திறமையான இளம் வீரர்கள், அதிரடி வீரர்கள் எடுக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி வந்த பின் மூத்த வீரர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்திய அணியின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்று மூத்த வீரர்களை ஓரம்கட்டினார்.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அப்படி இல்லை. ஐபிஎல்லில் தோனியின் அணி தேர்வு, வாய்ப்பு வழங்கும் விதம் எல்லாம் முழுக்க முழுக்க வித்தியாசமானது. கோப்பையை வெல்வது மட்டுமே இங்கு தோனியின் குறிக்கோள்.

எப்படி

எப்படி

இது லீக் போட்டி, இங்கு திறமையை கண்டுபிடிக்க வரவில்லை. அனுபவ வீரர்களை எடுப்பதே எங்கள் நோக்கம் என்று சென்னை பயிற்சியாளர் பிளமிங் கூட குறிப்பிட்டு இருக்கிறார். இதனால்தான் சிஎஸ்கே அணியில் எப்போதும் மூத்த வீரர்கள் மட்டும் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.

கோப்பை

கோப்பை

இளம் வீரர்களை அணியில் எடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியாது. இதற்கு பதிலாக அனுபவ வீரர்களை உள்ளே கொண்டு வந்து, அவர்களை வைத்து கோப்பை வெல்வதே சிஎஸ்கேவின் திட்டம். இது 2018, 2019ல் சிஎஸ்கேவிற்கு கை கொடுத்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சிஎஸ்கேவின் ஸ்டைல். இதனால்தான் நேற்று நடந்த ஏலத்திலும் அணியில் மூத்த வீரர்கள் மட்டுமே எடுக்கப்பட்டார்கள் என்கிறார்கள். தோனியின் ஸ்டைல் இதுதான்.. திறமை எல்லாம் முக்கியம் இல்லை.. அவருக்கு அனுபவம்தான் முக்கியம் என்று சிஎஸ்கேவிற்கு நெருக்கமான சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வீரர்

தமிழக வீரர்

தமிழகத்தில் அனுபவ வீரர்கள் யாரும் நேற்று ஏலத்திற்கு வரவில்லை. இதனால்தான் தமிழக வீரர்கள் பெரிதாக எடுக்கப்படவில்லை. தோனி இருக்கும் வரை அனுபவ வீரர்கள் மட்டும் எடுக்கப்படுவார்கள், இளம் வீரர்கள் மீது அவருக்கு ஐபிஎல் தொடரில் பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை என்று கூறுகிறார்கள் .

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழக வீரர்கள் மீது பாரபட்சம் எதுவும் இல்லை. அஸ்வின், நடராஜன் எல்லாம் ஏலத்திற்கு வந்தால் எடுப்போம். ஆனால் லோக்கல் போட்டிகளில் ஆடியவர்களை நம்பி அதிக தொகை போட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். இதனால்தான் நேற்று 33+ வயதுள்ள வீரர்களை மட்டுமே சிஎஸ்கே குறி வைத்து என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, February 19, 2021, 12:55 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+