இவரை எல்லாம் எடுத்துவிட்டு.. தமிழர்களை புறக்கணித்த தோனி.. முயற்சி கூட செய்யாத சிஎஸ்கே.. ஏன் இப்படி?
சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்திலும் சிஎஸ்கே அணி தமிழக வீரர்களை ஏலம் எடுக்காமல் புறக்கணித்து இருக்கிறது.
2021 ஐபிஎல் ஏலம் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் நினைத்தபடி அதிக தொகைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
பல இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வருகிறார்கள். சையது முஷ்டாக் கோப்பையில் நன்றாக ஆடிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்திற்கு சென்றுள்ளனர்.

சென்னை வீரர்கள்
சிஎஸ்கே அணி இந்த முறை இரண்டு ஆல் ரவுண்டர்களை எடுத்து உள்ளது. மொயின் அலியை சிஎஸ்கே எடுத்துள்ளது.இந்த நிலையில் சம்பந்தமே இன்றி கிருஷ்ணப்பா கவுதமை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

எவ்வளவு ஏலம்
அதிலும் இவரை 9.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது எல்லாம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இப்படி சம்பந்தமே இல்லாமல் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்துள்ள நிலையில் தமிழக வீரர்களை புறக்கணித்துள்ளது.

ஷாருக்கான்
முக்கியமாக ஷாருக்கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஷாருக்கான் எடுக்கப்பட்டார். ஆனால் இவரை எடுக்க சிஎஸ்கே முயற்சி கூட செய்யவில்லை. சிஎஸ்கே இவரை ஏலம் எடுக்க கூட முயற்சி செய்யாதது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தமிழக வீரர்கள்
தற்போது தமிழக அணியில் சாய் கிஷோர், என் ஜெகதீசன் மட்டுமே உள்ளனர். ஆனாலும் இவர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. தற்போது ஏலத்திலும் தமிழக வீரர்களை சிஎஸ்கே அணி குறி வைக்க மறுக்கிறது.


Click it and Unblock the Notifications