Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்பந்தமே இல்லாமல்.. இவரை எடுத்தது இதுக்குத்தான்.. வெளியான பரபரப்பு வீடியோ.. தோனி பக்கா பிளான்!

சென்னை: இளம் ஆந்திர பிரதேச வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி நேற்று ஏலம் எடுத்தது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. 292 வீரர்கள் இந்த ஏலத்தில் நேற்று ஏலம் விடப்பட்டனர்.

சென்னை அணி இதில் மொத்தம் 3 முக்கிய வீரர்கள் உட்பட 6 பேரை ஏலம் எடுத்தது. மொயின் அலி, கே. கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே நேற்று எடுத்தது.

ஆந்திரா வீரர்கள்

ஆந்திரா வீரர்கள்

நேற்று நடந்த இந்த இரண்டு இளம் வீரர்களை சிஎஸ்கே எடுத்துள்ளது. அதன்படி தற்போது பிரபலம் அடையாத இளம் வீரர்கள் எம். ஹரி சங்கர் ரெட்டி, பகத் வர்மா சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

ஏலம்

இதில் எம். ஹரி சங்கர் ரெட்டி ஆந்திராவில் முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். வலதுகை பவுலர் ஆவார். பேட்டிங்கும் செய்ய கூடியவர். இவரை சிஎஸ்கே அணி ஏன் எடுத்தது என்று கேள்வி எழுந்தது.

பதில்

பதில்

இந்த நிலையில் எம். ஹரி சங்கர் ரெட்டி சையது முஷ்டாக் கோப்பை தொடரில் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது. முதல் தர போட்டிகளில் இவர் பந்து வீசிய வீடியோக்கள் வெளியாகி உள்ளது. பவர் பிளேவில் புதிய பந்தை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவராக இவர் இருக்கிறார்.

விக்கெட்

விக்கெட்

கேரளாவிற்கு எதிரான போட்டியில் இவர் விக்கெட்டுகளை வீழ்த்தியது பெரிய அளவில் வைரலானது.யார்க்கர். ஸ்விங் என்று சிஎஸ்கே அணிக்கு இவர் நல்ல லோக்கல் பவுலராக இருப்பார். சாகர் சொதப்பும்பட்சத்தில் இவரை தோனி இறக்க வாய்ப்புள்ளது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இவர் ஆடும் பிளேயிங் லெவனில் இறங்குவது கஷ்டம். ஆனால் வலைப்பயிற்சியில் வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுப்பார். சாகரை தோனி அறிமுகப்படுத்தியது போல இவரையும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, February 19, 2021, 12:34 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+