இடையில் வந்த போன் கால்.. ஓப்பனருக்கு பதிலாக மொயின் அலியை எடுத்த சிஎஸ்கே.. என்ன காரணம்.. பரபர பின்னணி
சென்னை: இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதற்கு பின் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது.
2021 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரோன் பின்ச் போன்ற வீரர்கள் ஏலம் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் நினைத்தபடி அதிக தொகைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி
இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதற்கு பின் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. முதலில் மேக்ஸ்வெல்லை எடுக்கவே சிஎஸ்கே அணி திட்டமிட்டது.

ஸ்பின்
ஆனால் மேக்ஸ்வெல்லை எடுக்க முடியவில்லை. இவரை பெங்களூர் அணி எடுத்தது. இதனால் அவரை போலவே பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் மொயின் அலி சிஎஸ்கே எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் இல்லை.

ஹர்பஜன்
ஹர்பஜன், சாவ்லா போன்ற ஸ்பின் பவுலர்கள் சிஎஸ்கே அணியில் இப்போது இல்லை . இதனால் அவர்களை போல ஒரு ஸ்பின் பவுலர் மற்றும் பினிஷர் சிஎஸ்கே அணிக்கு தேவை . இதனால் மொயின் அலியை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

போன்
இவரை ஏலம் எடுத்த போது சிஎஸ்கே அணி நிர்வாகிகள் நீண்ட நேரம் போனில் பேசினார்கள். எவ்வளவு கோடி சென்றாலும் இவரை எடுக்கலாம் என்ற முடிவில் சிஎஸ்கே இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் ஒரே ஒரு வெளிநாட்டு வீரர் ஸ்லாட் நிறைவு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications