அவமானத்தை மறக்க மாட்டேன்.. அந்த அணியை கவிழ்ப்பதற்காக கோலி வகுத்த வியூகம்..இதுதான் ஏலத்தில் நடந்தது!
சென்னை: நேற்று ஐபிஎல் 2021 ஏலத்தில் பெங்களூர் அணி அதிக அளவில் பவுலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்களை குறி வைத்தது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி சிறப்பான வீரர்களை குறி வைத்து ஏலம் எடுத்து இருக்கிறது. எவ்வளவு செலவானாலும் அந்த அணி சில முக்கிய வீரர்களை கொக்கி போட்டு தூக்கி உள்ளது.
2021 ஐபிஎல் ஏலம் ஒருவழியாக நேற்று நடந்தது. ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் அதற்கு ஏற்றபடி வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.

எப்படி
நேற்று ஐபிஎல் 2021 ஏலத்தில் பெங்களூர் அணி அதிக அளவில் பவுலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்களை குறி வைத்தது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது. நேற்று ஏலத்தில் பெங்களூர் அணி சார்பாக கைலி ஜெமிசன், மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின் ஆகிய முக்கிய வீரர்கள் எடுக்கப்பட்டனர். மூன்று பேருமே பவுலிங் ஆல் ரவுண்டர்கள்.

பவுலர்கள்
இதனால் புதிய பெங்களூர் அணியின் பவுலிங் வலிமை அடைந்துள்ளது. இனி சிராஜ் போன்ற டெஸ்ட் பார்மெட் வீரர்கள் டி 20 போட்டிகளில் கொஞ்சம் அச்சம் இன்றி பவுலிங் செய்ய முடியும். சாஹல், சுந்தர் ஏற்கனவே இருப்பதால் பெங்களூர் அணியின் பவுலிங் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

காரணம்
பவுலிங் படையை வலிமையாக்க வேண்டும் என்று கோலி திட்டமிட்டு ஆட்களை எடுத்தார் என்று கூறப்படுகிறது. இத்தனை வருடம் பெங்களூர் அணியில் பவுலிங் சரியாக இல்லை. உமேஷ் யாதவ் எல்லாம் இருந்ததால் அந்த அணி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இது கோலிக்கு அவமானமான விஷயமாக இருந்தது.

பெங்களூர்
அதிலும் சிறிய மைதானமான பெங்களூர் மைதானத்தில் நன்றாக பவுலிங் செய்ய வீரர்கள் இல்லை. இதை வைத்து பெங்களூர் அணியை பலரும் கிண்டல் செய்வது வழக்கம்.இந்த அவமானங்கள், கிண்டல்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் அணி தேர்வில் கோலி சிறப்பான வீரர்களை எடுத்துள்ளார்.

மும்பை
அதேபோல் மும்பை அணியின் வலிமையான பேட்டிங் ஆர்டரை சமாளிக்க வேண்டும் என்பதற்காக கோலி இப்படி ஒரு அணியையே உருவாக்கி உள்ளார். வலிமையான பவுலிங் மூலம் மும்பை கவிழ்க்க முடியும். ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல முடியும் என்று கோலி நினைக்கிறார்.


Click it and Unblock the Notifications