ஒரு தமிழக வீரருக்காக.. தீவிரமாக களமாடிய கோலி.. சென்னை பையனை வைத்து கிங் போடும் மாஸ் பிளான்!
சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க பெங்களூர் அணி தீவிரமாக முயன்றது.
நேற்று முதல்நாள் சென்னையில் 2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்தது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னை வந்து இருந்தனர்.
சென்னையில் 5 மணி நேரம் நடந்த இந்த விறுவிறுப்பான ஏலத்தில் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். பெங்களூர் அணி இந்த முறை சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

சென்னை
2021 ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க பெங்களூர் அணி தீவிரமாக முயன்றது. இவரை ஏலம் எடுக்க பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஷாருக்கானை எப்படியாவது பெங்களூர் அணியில் எடுக்க வேண்டும் என்று கோலி நினைத்தார்.

வீரர்கள்
ஷாருக்கானுக்கு, மேக்ஸ்வெல்லும் கடைசியில் பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும். இதன் மூலம் பெங்களூரின் டெயில் எண்ட் சிறப்பாக இருக்கும் என்று கோலி நம்பினார். இதனால் ஷாருக்கானை எடுக்க கோலி கடுமையாக முயற்சி செய்தார்.

ஷாருக்கான்
5 கோடி ரூபாய் வரை ஷாருக்கானை எடுக்க கோலி முயன்றார். 5.25 கோடி ரூபாய்க்கு சென்ற பின் மட்டுமே பெங்களூர் அணி ஏலத்தில் பின்வாங்கியது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் ஆடிய விதம் பெரிய அளவில் கோலியை கவர்ந்து இருக்கிறது.

தமிழக வீரர்
இதனால் ஷாருக்கானை ஏலம் எடுக்க அவர் நினைத்தார். அதே சமயம் இந்த ஐபிஎல் தொடரில் ஷாருக்கான் நன்றாக ஆடினால் அவருக்கு உலகக் கோப்பை டி 20 தொடரில் ஸ்டான்ட் பை வீரர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். இந்திய அணியில் இவரை ஸ்டான்ட் பை வீரராக எடுக்க வாய்ப்புள்ளது.

கொரோனா விதிகள்
கொரோனா விதிகள் காரணமாக 25 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்படும். இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் ஷாருக்கான் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. கோலி இவர் மீது கண்ணை வைத்துவிட்டார், இவர் நன்றாக ஆடினால் கண்டிப்பாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications